ஆந்திரா மாநிலம், குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவரது மகன் 29 வயதுடைய கிருஷ்ணமூர்த்தி. இவர் பெங்களூரில் தங்கி கட்டிட தொழில் செய்து வந்த நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணமூர்த்திக்கு அவர் தங்கியிருந்த வீட்டின் அருகே தங்கியிருந்த வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த மேல்பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த 23 வயதுடைய மோனிஷா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகள் மற்றும் 4 வயதில் ஒரு மகன் உள்ளனர்.
இந்நிலையில் மோனிஷாவிற்கு தனது கணவர் கிருஷ்ணமூர்த்தியுடன் வேலை பார்க்கும் அன்பழகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி தனிமையில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் மனைவியின் கள்ளக்காதலை அறிந்த கிருஷ்ணமூர்த்தி மோனிஷாவையம் குழந்தைகளையும் ஊரில் உள்ள மோனிஷாவின் தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். தொடர்ந்து வாரம் ஒரு முறை அல்ல இரண்டு வாரத்திற்கு ஒரு முறைமனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க செல்வதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.
ஆனால் கள்ளக்காதலை கைவிடாத மோனிஷா தனது காதலன் அன்பழகனை அவ்வயபோது தனது கிராமத்திற்கு வரவழைத்து சந்தித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் பெங்களுருவில் உள்ள தனது வேலையை விட்டு கிருஷ்ணமூர்த்தி மனைவியின் தாய் வீட்டிலேயே தங்கி வந்திருக்கிறார். அப்போது கிருஷ்ணமூர்த்தி மது போதைக்கு அடிமையாகி மனைவியிடம் வாக்குவாதம் வாதம் செய்து வந்ததாக தெரிகிறது. பின்னர் பண தேவை ஏற்படவே கிருஷ்ணமூர்த்தி மனைவியை கண்டித்துவிட்டு மீண்டும் பெங்களூருவிற்கு மேஸ்திரி வேலைக்கு சென்றிருக்கிறார்.
இதற்கிடையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவர் கிருஷ்ணமூர்த்தியை தீர்த்துக்கட்ட முடிவு செய்த மோனிஷா கடந்த ஞாயிறு அன்று வழக்கம் போல விடுமுறைக்கு வந்த கணவருடன் நன்றாக பேசி சாப்பாட்டில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்திருக்கிறார். பின்னர் அவர் மயக்கம் அடைந்த உடன் இது குறித்து கள்ளக்காதலன் அன்பழகனுக்கு தகவல் தெரிவித்து வீட்டிற்கு வரவழைத்த மோனிஷா அவருடன் சேர்ந்து கிருஷ்ணமூர்த்தியை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார். தொடர்ந்து மறுநாள் காலை அக்கம் பக்கத்தினரிடம் கிருஷ்ணமூர்த்தி ரத்த வாந்தி எடுத்து இறந்து விட்டதாக நாடகமாடி உள்ளார்.
ஆனால் மகனின் இறப்பில் சந்தேகம் அடைந்த கிருஷ்ணமூர்த்தியின் தந்தை இது குறித்து காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் அன்பழகனுடன் ஏற்பட்ட கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவி மோனிஷாவே காதலனுடன் எரிந்து கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து மோனிஷா, அன்பழகன் மற்றும் உடந்தையாக இருந்த சுப்பிரமணியன் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.