“அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக தொங்கிய நடிகை” - கணவருடன் பேசிய கடைசி வீடியோ கால்.. நடந்தது என்ன?

திருமணமான இரண்டு வருடங்களில் நடிகை தற்கொலை செய்து கொண்டது அவரது ரசிகர்களிடையே...
subhashini
subhashini
Published on
Updated on
1 min read

சின்னத்திரை பிரபல நடிகையாக இருந்து வந்தவர் இலங்கையை சேர்ந்த 36 வயதுடைய சுபாஷினி பாலசுப்ரமணியம். இவர் இனியவன் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற நிலையில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “கயல்” என்ற சீரியலில் துணை நடிகையை நடித்து வந்தார். சுபானி கடந்த 2024 ஆம் ஆண்டு பிபின் சந்திரா என்பவரை திருமணம் செய்து கொண்ட சுபாஷினி அவருடன் பெங்குலுரில் தங்கி வசித்து வந்திருக்கிறார். எனவே சென்னையில் படப்பிடிப்பிற்கு மட்டும் வந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது.

அவ்வாறு சென்னைக்கு படப்பிடிப்புக்கு வரும்போது தங்கிக்கொள்ள ஐயப்பந்தாங்கல் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து படப்பிடிப்பின் போது தங்கி வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்கு வந்த சுபாஷினுக்கும் அவரது கணவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த நடிகை சுபாஷினி தனது கணவருக்கு வீடியோக்கள் செய்து பேசிக்கொண்டிருந்த போதே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்படுகிறது.

subhashin and their husband
subhashin and their husband

இதனை தொடர்ந்து நடிகையின் கணவர் குடியிருப்பின் காவலாளிக்கு தொடர்பு கொடு தகவல் அளித்த நிலையில் காவலாளி போலீசாருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து தூக்கில் தொங்கிய நடிகையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தற்கொலைக்கான காரணம் பற்றி நடிகையின் கணவர் பிபின் சந்திராவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான இரண்டு வருடங்களில் நடிகை தற்கொலை செய்து கொண்டது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் கணவர் மீது சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் சமூக வலைத்தளங்களில் எப்போதும் போட்டோ மற்றும் வீடியோக்களை பகிரும் சுபாஷினி தன்னை தனது கணவர் மகிழ்ச்சியாக பார்த்து கொள்வதாகவும், காதலனாக மட்டும் இல்லாமல் நண்பனாகவும் ஒரு சிறந்த பெற்றோராகவும் தன்னை அரவணைத்து அனுப்பு காட்டுவதாகவும் பதிவிட்டுள்ளார். எனவே அந்த வீடியோக்கள் பேசிய [போது ஏற்பட்ட வாக்குவாதம் தான் சுபாஷினி தற்கொலை காரணமான என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com