க்ரைம்

“ஒன்பதாம் வகுப்பு மாணவியை சீரழித்த மேஸ்திரி” - பள்ளி மாணவிக்கு நடந்த கொடுமையால் மருத்துவர்கள் அதிர்ச்சி… வேலூரில் பரபரப்பு!

கடந்த வாரம் விடுமுறைக்காக தனது சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு சென்று போது அங்கு...

Mahalakshmi Somasundaram

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் பாலாஜி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மலர்க்கொடி என்பவருக்கும் கடந்த சில வருங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் நீண்ட நாட்களாகியும் குழந்தைகள் பிறக்காமல் இருந்ததாக சொல்லப்படுகிறது. எனவே இந்த தம்பதி ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வைத்திருக்கின்றனர். கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் நிலையில் குழந்தை வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் வளர்ந்து வந்திருக்கிறது.

உறவினர் வீட்டில் வசித்து வரும் அந்த சிறுமி குடியாத்தம் பகுதியில் உள்ள உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த நிலையில் விடுமுறை தினங்களின் போது பெற்றோர் வீட்டிற்கு சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த வாரம் விடுமுறைக்காக தனது சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு சென்று போது அங்கு சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. அதன் காரணமாக சிறுமியை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றபோது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர் .

மருத்துவ பரிசோதனையில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தெரிய வந்தது. எனவே உடனடியாக இது குறித்து மருத்துவர்கள் குடியாத்தம் மகளிர் காவல் நிலையம் மற்றும் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்ட போது குடியாத்தம் தங்கம் நகர் பகுதியை பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரியான கமலேஷ்ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்தது

இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் கட்டிட மேஸ்திரி கமலேசை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது கமலேஷ் அங்கிருந்து தப்பியோடிய நிலையில் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் துறையினர் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் குடியாத்தம் போலீசார் அவனை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது குற்றவாளி கமலேஷ் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருப்பதாக குடியாத்தம் போலீசருக்கு வந்த ரகசிய தகவலின் பேரில் விரைந்து அப்பகுதிக்கு சென்ற குடியாத்தம் போலீசார் கர்நாடக மாநிலம் பெங்களூர் கே ஆர் புரம் பகுதி உணவகத்தில் வேலை செய்து வந்த கமலேஷை கைது செய்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஒன்பதாம் வகுப்பு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.