

சென்னையில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் பணிபுரிபவர் 45 வயதுடைய லதா. இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ள நிலையில் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். மேலும் மகனும் தந்தையுடன் தங்கி வெளிநாட்டில் பட்டப்படிப்பு படித்து வருவதாக சொல்லப்படுகிறது. எனவே லதா மட்டும் சென்னையில் தனியாக தங்கி வேலை பார்த்து வருகிறார். லதா தினமும் பேருந்தில் வேலைக்கு சென்று வரும் நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சொந்தமாக கார் வாங்கி ஓட்டுநரை வேலைக்கு வைத்திருக்கின்றனர்.
லதாவின் காருக்கு ஓட்டுநராக பணிபுரிந்து வரும் 22 வயதுடைய ராம் என்பவருடன் லதா நெருங்கி பழகி வந்த நிலையில் இருவருக்கு இடையேயான பழக்கம் நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. மேலும் தனிமையில் இருக்க விடுதிகளுக்கு சென்றால் சந்தேகம் ஏற்படும் என்ற காரணத்தால் இருவரும் அடிக்கடி காரிலேயே உல்லாசமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ராமு வேறு ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில் அவருக்கு ஐபோன் வாங்கி தர லதாவிடம் பணம் கேட்டுருக்கிறார்.
அப்போது பணம் கொடுக்க மறுத்த லதா என்னுடன் தொடர்பில் இருக்கும் போது வேறு பெண்ணை காதலிக்க கூடாது என குறி வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். மேலும் ராமுவை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் சொல்லப்படும் நிலையில் இதனால் ஆத்திரமடைந்த ராமு வழக்கம் போல காரின் பின் சீட்டில் இருவரும் உல்லாசத்தில் இருப்பதை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு அந்த வீடியோவை வெளிநாட்டிலிருந்து வந்த லதாவின் கணவரிடம் காண்பித்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த லதாவின் கணவர் அவரை விவாகரத்து செய்யும் நிலைக்கு சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து லதா அளித்த புகாரின் படி கள்ளக்காதலன் ராமுவை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் லதாவுடன் ராமு கடந்த இரண்டு ஆண்டுகளாக தகாத உறவில் இருந்தது தெரியவந்தது. மேலும் தனிநபர் அந்தரங்கத்தை புகைப்படம் எடுப்பது மற்றும் மிரட்டுவது போன்ற குற்றங்களுக்காக போலீசார் ராமுவை சிறையில் அடைத்துள்ளனர். பெண் தனது கார் ஓட்டுநருடன் இரண்டு வருடங்களாக தகாத உறவில் இருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.