அசாம் மாநிலம், கர்பி ஆங்கலாங்கு மாவட்டம், பெலுக்குரி முண்டா பகுதியை சேர்ந்தவர்கள் கார்பி மற்றும் மிரா தம்பதியினர் இவர்களது பிள்ளைகள் வெளி ஊரில் வேலை பார்த்து வரும் நிலையில் கணவன் மனைவி மட்டும் தனியாக பெலுக்குரி முண்டா பகுதியில் வசித்து வந்தனர். தெய்வ நம்பிக்கை அதிகம் உடைய தம்பதியினர் வீட்டில் சாமி புகைப்படங்களை வைத்து தினந்தோறும் பூஜை செய்வதை வழக்கமாக வைத்திருந்திருக்கின்றனர். மேலும் இவர்களின் செலவுகளுக்கு தேவையான பணத்தை பிள்ளைகள் மாதம் மாதம் அனுப்பி வைத்ததாக சொல்லப்படுகிறது.
பெலுக்குரி முண்டா கிராமத்தில் ஒட்டு மொத்தமாகவே 30 குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில் கார்பி மிரா தம்பதியினரை தவிர மற்றவர்களின் குடும்பங்களில் பணக்கஷ்டம் இருந்துள்ளது. மேலும் மற்ற குடும்பங்களில் அவ்வப்போது உடல்நல பிரச்சனைகளும் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மன வருத்தத்தில் இருந்த மற்ற குடும்பத்தினர் கார்பி குடும்பத்தை பார்த்து பொறாமை பட்டதாக கூறப்படுகிறது. இந்த பொறாமையானது ஆத்திரமாக மாறி கார்பி மற்றும் அவரது மனைவி இருவரும் சேர்ந்து கிராமத்தில் உள்ள மற்ற குடும்பங்களுக்கு பில்லி சூனியம் வைத்ததாக அவர்கள் நினைத்துள்ளனர்.
இது குறித்து தம்பதிகளிடம் ஊர் மக்கள் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த தம்பதிகளிடம் பிரச்சனை செய்த ஊர் மக்கள் அவர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்திருக்கின்றனர். இதில் தம்பதிகள் உடல் கருகி உயிரிழந்த நிலையில் தகவலராய்ந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு துறையினர் உதவியுடன் தீயை அணைத்தனர். மேலும் உயிரிழந்த தம்பதிகளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஊர் மக்களிடம் விசாரணை மேற்கொண்ட போது இது குறித்து யாரும் பதிலளிக்காமல் இருந்திருக்கின்றனர். அப்போது அங்கு வந்த கார்பியின் உறவினர்கள் ஊர் மக்கள் தம்பதியை எரித்து கொன்றதாகவும் இதுகுறித்து தகவலறிந்து வருவதற்குள் இருவரும் உயிரிழந்து விட்டதாகவும் தெரிவித்தனர். தனியாக வாழ்ந்த தம்பதியை ஊர் மக்கள் பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.