விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே வீரசோழன் பகுதியை சேர்ந்தவர் 25 அப்துல் அஜீஸ். இவர் நரிக்குடி பகுதியில் உள்ள ஜும்மா பள்ளிவாசலில் சில ஆண்டுகளாக அஷ்ரத் ஆக பணியாற்றி வருகிறார். அப்பகுதி மக்கள் குழந்தைகளுக்கு ஓதுவது மற்றும் உடல்நல குறைபாடுகளை சரி செய்து கொள்ள பள்ளிவாசலுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அதே போல நரிக்குடி பகுதியை சேர்ந்த 22 வயதுடைய பெண் ஒருவர் நீண்ட நாட்களாக உடல்நலக் குறைபாட்டால் அவதிப்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.
எனவே அவரது பக்கத்துக்கு வீட்டு பெண் ஒருவர் ஜும்மா பள்ளிவாசல் குறித்து தெரிவித்து அங்கு சென்று வரும்போது அறிவுரை கூறியுள்ளார். அதன்படி இளம் பெண்ணும் நேற்று முன்தினம் பள்ளிவாசலுக்கு சென்ற நிலையில் அங்கு அஷ்ரத்தாக பணிபுரிந்து வந்த அப்துல் அஜீஸ் பெண்ணுக்கு ஓதிவிட்டு “இதுபோல் தொடர்ந்து வாங்க நாளை நான் சொல்லும் நேரத்துக்கு தனியா வாங்க” என தெரிவித்து அனுப்பி வைத்துள்ளார். பின்னர் மறுநாள் பள்ளிவாசலுக்கு வந்த பெண்ணிடம் தனியாக மந்திரம் செய்ய வேண்டும் என தெரிவித்து பள்ளிவாசலில் உள்ள அறைக்குள் அழைத்து சென்றிருக்கிறார்.
பின்னர் பெண்ணுக்கு மந்திரம் செய்வது போல் சிறிது நேரம் நடித்து அவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயற்சி செய்துள்ளார். எனவே சுதாரித்து கொண்ட பெண் கத்தி கூச்சலிடவே எங்கு மாட்டி கொள்வோமோ என பயந்த அப்துல் அஜீஸ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பெண்ணை மிரட்டியுள்ளார். இருப்பினும் பெண் கூச்சலிடுவதை நிறுத்தததால் ஆத்திரமடைந்த அஜீஸ் பெண்ணின் கல்லூத்து மற்றும் கைகளில் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதனால் பலத்த காயமடைந்த இளம் பெண் வலி தாங்க முடியாமல் பள்ளிவாசலில் இருந்து வெளியே வந்து கூச்சலிட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் பெண்ணை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மேலும் தப்பிக்க முயன்ற அப்துல் அஜீஸை மடக்கி பிடித்து நரிக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காயமடைந்த அந்த இளம் பெண் திருச்சுழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பள்ளிவாசலுக்கு சென்ற இளம் பெண்ணிடம் அஷ்ரத்தாக பணிபுரியும் வாலிபர் தவறாக நடந்து கொண்டது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.