ponnazhagi, anadharaj and husband saravanakumar  
க்ரைம்

“கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவி” - காத்திருந்து கதையை முடித்த கணவன்.. நடுவீட்டில் ரத்தவெள்ளத்தில் கிடந்த சடலங்கள்!

இரவு சரவணக்குமார் வெளியே சென்று வருவதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்றுள்ளார்...

Mahalakshmi Somasundaram

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியைச் சேர்ந்தவர் 27 வயதுடைய சரவணக்குமார். கட்டிடத் தொழிலாளியான இவருக்கும் 21 வயதுடைய பொன்னழகு என்பவருக்கும் திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை என மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், பாளையம்பட்டி யாதவர் தெருவில் வசித்து வரும் 30 வயதுடைய ஆனந்தராஜ் என்பவருக்கும் பொன்னழகுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இருவரும் கட்டிடக் கூலி வேலை செய்து வந்த நிலையில், வேலை செய்யும் இடத்தில் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது.ஆனந்தராஜுக்கும் திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் இருவருக்கும் இடையே பல மாதங்களாகத் தொடர்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

அடிக்கடி ஆனந்தராஜ் பொன்னழகியின் வேட்டிக்கு வந்த சென்ற நிலையில் இது குறித்து சரவணகுமாருக்கு தெரியவந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் கோபமடைந்த சரவணகுமார் குழந்தைகளின் எதிர்காலத்தை எண்ணிய அவர் இருவரையும் தனித்தனியாக அழைத்துக் கண்டித்துள்ளார். இருப்பினும், இருவரும் பழக்கத்தைக் கைவிடவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று(நவ 16) இரவு சரவணக்குமார் வெளியே சென்று வருவதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்றுள்ளார்.

கணவர் வீட்டில் இல்லை என்பதை அறிந்த ஆனந்தராஜ், பொன்னழகின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை ஏற்கெனவே அறிந்து மறைந்திருந்து கண்காணித்த சரவணக்குமார், இருவரும் ஒன்றாக இருப்பதைக் கண்டு ஆத்திரமடைந்துள்ளார். பின்னர் வீட்டிற்குள் நுழைந்த அவர், அரிவாளாலும் கல்லாலும் தாக்கியதில் பொன்னழகும் ஆனந்தராஜும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த நகர் காவல் நிலைய போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரையும் கொலை செய்துவிட்டு வீட்டிற்குள் அமர்ந்திருந்த சரவணக்குமாரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவியையும் அவரது கள்ளகாதலனையும் கணவர் கொலை செய்த சம்பவம் பாளையம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.