சென்னை வியாசர்பாடி புதூர் நகர் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் 19 வயதான சங்கர் இவர் அடையாறு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். பின்னர் கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்திய சங்கர் கிடைக்கும் வேலைகளை செய்து வந்துள்ளார். நேற்று சங்கருக்கு பிறந்தநாள் என்பதால் அவரது கல்லூரி நண்பர்கள் சங்கரை கேக் வெட்ட வேண்டும் என வெளியில் அழைத்து சென்றுள்ளனர்.
வெளியில் சென்ற அவர்கள் எருக்கஞ்சேரி பகுதியில் உள்ள ஒரு காலியிடத்தில் அனைவரும் சேர்ந்து கால்பந்து விளையாடியுள்ளனர். அப்போது அங்கு வந்த ஸ்டீபன் ராஜ் என்பவருக்கும் சங்கருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது அதில் சங்கர் ஸ்டீபன் ராஜை அடித்துள்ளார், இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த மற்ற நண்பர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைத்துள்ளனர்.பின்னர் சங்கரின் பிறந்தநாளை அனைவரும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
அப்போது அவ்விடத்திற்கு வந்த நிதின் மற்றும் லிங்கேஸ் சங்கரிடம் பிறந்த நாளுக்கு மது வாங்கி தருமாறு கேட்டுள்ளனர். மது வாங்கி அனைவரும் குடித்த பிறகு நிதின் மற்றும் லித்தேஷ் சங்கரிடம் எதற்கு ஸ்டீபன் ராஜை அடித்தாய் என கேட்டு சண்டையிட்டுள்ளனர். பின்னர் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஸ்டீபன் ராஜ், விஜய், நிதின், லித்தேஷ் ஆகிய நான்கு பெரும் சேர்ந்து சங்கரை கீழே தள்ளி சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது அவர்களிடம் இருந்த சங்கர் தப்பி ஓடியுள்ளார்.
இருப்பினும் விடாமல் துரத்தி சென்ற நான்கு பெரும் எருக்கஞ்சேரி உள்ள கலசம் தெரு பகுதியில் ஒரு முட்புதரில் வைத்து கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர். இதில் சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை அடுத்து சங்கரின் உடலை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற ஸ்டீபன் ராஜ், விஜய், நிதின், லித்தேஷ் ஆகிய நான்கு பேரையும் தேடி வருகின்றனர். பிறந்தநாளன்று நண்பர்களால் சங்கர் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன பிரச்சனை நடந்தது ஏற்கனவே நண்பர்களுக்குள் முன் பகை எதாவது இருந்த என்ற கோணத்தில் கொலை காண காரணத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.