“காளி தான் பலி கேட்டுச்சு” - தம்பியை கழுத்தறுத்து கொன்ற அண்ணன்.. மஞ்சள் பூசப்பட்ட கல்லின் முன் கிடந்த சடலம்!

அம்மனுர் கிராமத்தில் ஒதுக்குப்புறமாக உள்ள சாலையில் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் அளித்துள்ளனர்.
mathuranthagam murder news
mathuranthagam murder newsmathuranthagam murder news
Published on
Updated on
2 min read

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த அம்மனூர் கிராமத்தில் வசித்து வந்தவர் 27 வயதான சுபாஷ். இவர் மின்வாரியத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்துள்ளார். இவருடன் சேர்ந்து அவரது பெரியப்பா மகனான சுரேந்தர் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்துள்ளார். இருவருக்கும் திருமணம் ஆகாத நிலையில், வேலைக்கு இருவரும் ஒன்றாக சென்று வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை சுபாஷ் வீட்டில் இருந்து காணாமல் போன நிலையில் அவர்களது பெற்றோர்கள் அவரை தேடி வந்துள்ளனர்.

எங்கு தேடியும் சுபாஷ் கிடைக்காத நிலையில் போலீசில் புகாரளித்துள்ளனர். வழக்கு பதிவு செய்த போலீசார் சுபாஷின் புகைப்படத்தை வைத்து தேடி வந்துள்ளனர். இதற்கிடையே போலீசுக்கு போன் செய்த ஒருவர் அம்மனுர் கிராமத்தில் ஒதுக்குப்புறமாக உள்ள சாலையில் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை பார்த்து உயிரிழந்துள்ளது சுபாஷ் என்பதை உறுதிபடுத்தியுள்ளனர். மேலும் அவரது பெற்றோர்களுக்கு தகவலளித்து சுபாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மோப்பணையை வரவழைத்து புலன் விசாரணையை தொடங்கிய போலீசார், மோப்ப நாய் தொடர்ந்து மூன்று முறை கொலை செய்யப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள ஓர் இடத்தை அடையாளம் காட்டியுள்ளது. அங்கு ஒரு பெரிய மஞ்சள் பூசப்பட்ட கல்லின் முன்பு ரத்த கறை படிந்த கத்தியும் சுபாஷின் சட்டை துண்டும் இருந்துள்ளது. இதனை கவனித்த போலீசார் அவற்றை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை வைத்து சுபாஷை கொலை செய்தவரை கைது செய்துள்ளனர்.

Admin

விசாரணையில் சுபாஷை கொலை செய்தது அவரின் பெரியப்பா மகன் சுரேந்தர் என்பது தெரிய வந்துள்ளது. அவர் அளித்த வாக்குமூலத்தில் “என் மீது காளி தேவி இறங்கி பலி கேட்டது அதனால் தான் நன் எனது தம்பியை பலி கொடுத்தேன்” என கூறியுள்ளார். இதனை அடுத்து சுரேந்தர் பற்றி அவரது குடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொண்ட போது கடந்த ஒரு வாரமாகவே அவர் பித்து பிடித்ததை போல நடந்து கொண்டதாகவும், இரவு நேரத்தில் குளித்து வழக்கத்து மாறாக அதிக உணவு உண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

எனவே போலீசார் சுரேந்தர் மனநலம் பாதிக்கப்பட்டவரா அல்லது வேறு ஏதுனும் காரணத்திற்காக சுபாஷை கொலை செய்து விட்டு தப்பிக்க இவ்வாறு நாடகம் ஆடுகிறாரா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தம்பியை அண்ணனே கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com