JPMorgan Chase 
க்ரைம்

பதவி உயர்வு வேணுமா? அப்போ என் கூட படு! - இந்திய வாலிபருக்கு அமெரிக்காவில் நடந்த கொடுமை: அம்பலமான பெண் அதிகாரியின் முகம்!

15 ஆண்டுகளாக ஜேபி மோர்கன் வங்கியில் பணியாற்றி வரும் 37 வயதான லோர்னா ஹஜ்டினி மீது சுமத்தப்பட்டுள்ள இந்த புகார்கள் சர்வதேச வங்கித் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

மாலை முரசு செய்தி குழு

அமெரிக்காவின் பிரபல வங்கியான ஜேபி மோர்கன் சேஸ் (JPMorgan Chase) நிறுவனத்தின் உயர் அதிகாரி லோர்னா ஹஜ்டினி மீது, அவருடன் பணிபுரிந்த இந்திய வாலிபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் மற்றும் இனவெறி புகார்களைத் தெரிவித்து நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வாலிபரை "பிரவுன் பாய் இந்தியன்" (Brown boy Indian) என்று கிண்டல் செய்ததோடு, அவருக்கு போதை மருந்து கொடுத்து கட்டாயப்படுத்தி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும், இதற்குச் சம்மதிக்காவிட்டால் அவரது கரியரை காலி செய்துவிடுவேன் என்று லோர்னா மிரட்டியதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றத் தொடங்கியபோது இந்தத் தொல்லைகள் ஆரம்பமானதாக அந்த வாலிபர் தெரிவித்துள்ளார். ஒருமுறை லோர்னா தனது பேனாவைக் கீழே போட்டுவிட்டு, அதை எடுப்பது போல நடித்து அந்த வாலிபரின் காலைத் தொட்டு சில்மிஷம் செய்ததாகவும், கல்லூரி காலத்தில் பேஸ்கட்பால் விளையாடியது பற்றி ஆபாசமாகப் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனை அந்த வாலிபர் தட்டிக்கேட்டபோது, "உன்னால் எனக்குச் சுகம் கிடைக்காவிட்டால் உன்னை ஒழித்துக்கட்டிவிடுவேன், நீ எனக்குச் சொந்தமானவன் என்பதை மறந்துவிடாதே" என்று லோர்னா வெளிப்படையாக மிரட்டியுள்ளார்.

செப்டம்பர் 2024 இல் நடந்த மற்றொரு சம்பவத்தில், அந்த வாலிபரின் வேலையை விமர்சனம் செய்த லோர்னா, அவருக்குக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வைத் தடுத்துவிடுவேன் என்று பயமுறுத்தியுள்ளார். "நிர்வாகம் உன்னைப் போன்ற ஒரு இந்திய வாலிபரைத் தலைவனாக ஏற்கும் என்று நினைக்கிறாயா? இன்று இரவு நீ என்னுடன் படுக்கவில்லை என்றால், உன்னுடைய புரமோஷனை கெடுத்துவிடுவேன்" என்று அவர் மிரட்டியதாக வழக்கு பதிவாகியுள்ளது. இதனால் பயந்துபோன அந்த வாலிபர் லோர்னாவுடன் செல்ல சம்மதித்துள்ளார், ஆனால் அவர் அழுத சத்தத்தை அருகில் இருந்தவர்கள் கேட்டதாகவும் சாட்சியங்கள் உள்ளன. மேலும் அதிர்ச்சிகரமான விஷயமாக, அந்த வாலிபரை பாலியல் செயல்களில் ஈடுபடுத்த லோர்னா அவருக்குத் தெரியாமல் 'ரோஹிப்னால்' (Rohypnol) எனப்படும் போதை மருந்தைக் கொடுத்ததை அவரே ஒப்புக்கொண்டுள்ளார். ஒருமுறை அந்த வாலிபரின் வீட்டிற்கே சென்ற லோர்னா, அவரது மனைவியைப் பற்றி மிகவும் தரக்குறைவாகவும் இனவெறியுடனும் பேசியுள்ளார். வாலிபரின் சம்மதம் இல்லாமல் அவரை வற்புறுத்தி வாய்வழி உறவில் ஈடுபட்ட போது, அந்த வாலிபர் கதறி அழுதுள்ளார். அதற்கு, "அழுவதை நிறுத்து, நீ சொல்வதை யாரும் நம்ப மாட்டார்கள்" என்று லோர்னா ஏளனம் செய்துள்ளார்.

இது குறித்து மே 2025 இல் ஜேபி மோர்கன் வங்கியிடம் அந்த வாலிபர் புகார் அளித்தார். ஆனால், வங்கி நடத்திய விசாரணையில் லோர்னா மீது எந்தத் தவறும் இல்லை என்று கூறி புகாரைத் தள்ளுபடி செய்துவிட்டது. தற்போது வரை லோர்னா அதே வங்கியில் பணியாற்றி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட இந்திய வாலிபருக்கு வேறு எங்கும் வேலை கிடைக்கவில்லை. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பொருளாதார இழப்பிற்காக அந்த வாலிபர் தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளார். 15 ஆண்டுகளாக ஜேபி மோர்கன் வங்கியில் பணியாற்றி வரும் 37 வயதான லோர்னா ஹஜ்டினி மீது சுமத்தப்பட்டுள்ள இந்த புகார்கள் சர்வதேச வங்கித் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்