டெல்லியின் உத்தம் நகர் பகுதியில் விபத்து என்று நம்பவைக்கப்பட்ட மரணம் ஒன்று, உண்மையில் ஒரு திட்டமிட்ட கொலை என்பது தெரியவந்துள்ளது.
ஜூலை 13 அன்று, மேற்கு டெல்லியின் ஜனக்புரி பகுதியில் உள்ள மருத்துவமனையில், கரன் தேவ் என்ற 36 வயது நபர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார். அவரது மனைவி சுஷ்மிதா, இது ஒரு தற்செயலான மின்சார விபத்து என்று கூறினார். குடும்பத்தினர் இதை இயல்பான மரணமாகக் கருதி, பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டாம் என்று விரும்பினர். ஆனால், இளம் வயதில் ஏற்பட்ட இந்த மரணத்தின் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, காவல்துறை பிரேதப் பரிசோதனையை வலியுறுத்தியது. உடல், ஹரிநகரில் உள்ள தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இந்த முடிவு, பின்னர் விசாரணையின் போக்கை மாற்றியது.
ஜூலை 16 அன்று, கரனின் தம்பி குணால் தேவ், ஒரு முக்கியமான ஆதாரத்தை காவல்துறையிடம் ஒப்படைத்தார். சுஷ்மிதாவுக்கும், கரனின் உறவினரான ராகுலுக்கும் இடையேயான இன்ஸ்டாகிராம் உரையாடல், இந்த மரணம் ஒரு திட்டமிட்ட கொலை என்பதை வெளிப்படுத்தியது. குணால் இந்த உரையாடலை வீடியோவாகப் பதிவு செய்து, காவல்துறையிடம் சமர்ப்பித்தார். இந்த உரையாடல், ஒரு கொடூரமான சதித்திட்டத்தின் விவரங்களை அம்பலப்படுத்தியது.
ஜூலை 12 இரவு, கரனின் உணவில் 15 மயக்க மாத்திரைகள் கலக்கப்பட்டதாக உரையாடல் தெரிவிக்கிறது. ஆனால், மாத்திரைகள் உடனடியாக வேலை செய்யவில்லை, இதனால் சுஷ்மிதா பதற்றமடைந்து, தனது கள்ளக் காதலனிடம்,
"மருந்து சாப்பிட்டு மூணு மணி நேரம் ஆச்சு. வாந்தி இல்லை, வயிற்றுப் போக்கும் இல்லை, இன்னும் இறக்கவும் இல்லை. இப்போ என்ன செய்ய?”
ராகுல் - “எதுவும் வேலை செய்யலைன்னா, கரன்ட் ஷாக் கொடு,”
சுஷ்மிதா - “மின்சாரம் பாய்ச்ச எப்படி கட்டுவது?”
ராகுல் - “டேப் வச்சு கட்டு
சுஷ்மிதா - “வாயைத் திறக்க முடியலை. தண்ணி ஊத்த முடியுது, ஆனா மருந்து கொடுக்க முடியலை . நீ இங்க வா, ஒண்ணா சேர்ந்து மருந்து கொடுக்கலாம்,”
என்று இவ்வாறாக அந்த உரையாடல் நீள்கிறது.
காவல்துறையின் கூற்றுப்படி, கரனின் மரணத்தை விபத்தாகக் காட்ட, மயக்க மருந்து கொடுத்து, பின்னர் மின்சாரம் பாய்ச்சுவது என்று திட்டமிடப்பட்டது. மயக்க மாத்திரைகள் உடனடியாக வேலை செய்யாததால், கரன் மயக்க நிலையில் இருக்கும்போதே, விரலில் மின்சாரம் பாய்ச்சப்பட்டது. இது ஒரு மின்சார விபத்து என்று தோன்ற வேண்டும் என்பது அவர்களின் திட்டமாக இருந்தது. கொலை நடந்தவுடன், சுஷ்மிதா, கரனின் மாமனார் வீட்டிற்குச் சென்று, மின்சாரம் தாக்கியதாகத் தெரிவித்தார். குடும்பத்தினர் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.
ஆரம்பத்தில், கரனின் தந்தையும், ராகுலும் பிரேதப் பரிசோதனைக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், இளம் வயதில் ஏற்பட்ட இந்த இயற்கைக்கு மாறான மரணத்தின் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, காவல்துறை விதிமுறைகளின்படி பிரேதப் பரிசோதனையை மேற்கொண்டது. ஜூலை 16 அன்று, குணால் சமர்ப்பித்த உரையாடல் ஆதாரங்களை ஆய்வு செய்தபின், காவல்துறை ஒரு எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தது. விசாரணையில், இருவரும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.