உத்திர பிரதேச மாநிலம், ஆகவன்பூர் பகுதியை சேர்ந்தவர் ராகுல். இவருக்கும் பக்கத்துக்கு ஊரை சேர்ந்த அஞ்சலி என்ற பெண்ணுக்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி முன்னின்று குழந்தைகள் உள்ள நிலையில் அஞ்சலி சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் வீடியோவை பதிவு செய்வதனை வழக்கமாக வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. எனவே சமூக வலைத்தளங்களில் அதிக பாலோவர்ஸ் இருந்துள்ளனர். இதனை தொடர்ந்து அடிக்கடி குடும்பத்துடன் வெளியில் சென்று அதனை வீடியோ எடுத்து பதிவிடுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.
அந்த வகையில் ஒரு நாள் அஞ்சலி தனது கணவர் ராகுலுடன் ரீல்ஸ் செய்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்து சிலர் கமெண்ட்ஸ் பகுதியில் “he is not worth எனவும் நீங்க அழகா இருக்குற மாதிரி உங்க கணவர் அழகா இல்லை” என தெரிவித்துள்ளனர். எனேவ அஞ்சலி தனது கணவருடன் ரீல்ஸ் பதிவிடுவதை தவிர்த்து வந்திருக்கிறார். இந்த சுழலில் அஞ்சலிக்கு அதே பகுதியை சேர்ந்த சமூக வலைதள பிரபலமான அஜய் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் சேர்ந்து ரீல்ஸ் செய்து வீடியோக்களை பதிவிட்டு வந்தனர்.
அஜய் மற்றும் அஞ்சலி இருவரும் அடிக்கடி ரீல்ஸ் செய்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நெருங்கி பழகி வந்திருக்கின்றனர். நாளடைவில் இந்த பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி இருவரும் அடிக்கடி அஞ்சலி வீட்டில் அவரது கணவர் இல்லாத போது தனிமையில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. வழக்கம் போல் ராகுல் பணிக்கு சென்ற நிலையில் அஞ்சலி தனது கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்து தனிமையில் இருந்துள்ளார். அப்போது பேருந்தை தவற விட்டு வீட்டிற்கு வந்த ராகுல் அஞ்சலி ஆற்றும் அஜய்யை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
மேலும் இது குறித்து இருவரிடமும் கேட்டு கண்டித்துள்ளார், எனவே அஜய் மற்றும் ராகுலுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது இதில் ஆத்திரமடைந்த அஞ்சலை தனது கணவரை கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார். பின்னர் இருவரும் சேர்ந்து ராகுலின் உடலை இருசக்கர வாகனத்தில் வைத்து வாயால் பகுதிக்கு கொண்டு சென்று அங்கு வீசியுள்ளனர். மேலும் அஜய் தனது துப்பாக்கியால் ராகுலை சுட்டதில் அவரது உடலில் மார்பு பகுதியில் மூன்று குண்டுகள் பதிந்திருந்தது. இதனை தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் ராகுல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அஜய்யை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அஞ்சலி மற்றும் அஜய் இருவரும் சேர்ந்து ராகுலை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அஜய் மற்றும் அஞ்சலியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் இருவரையும் சிறையில் அடைத்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.