க்ரைம்

“கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்ற மனைவி” - இரவு முழுவதும் வாசலில் இருந்த சடலம்.. விடிந்ததும் மாமியார் செய்த சம்பவம்!

மது அருந்தும் பழக்கமுடைய தினகரன் தினமும் மது அருந்திவிட்டு வீட்டில் இருப்பவர்களிடம் தகராறு செய்து வந்திருக்கிறார்.

Mahalakshmi Somasundaram

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே மணிமங்கலம் கிராமம் காந்தி நகரில் வசித்து வருபவர் 45 வயதுடைய தினகரன். இவர் அதே பகுதியில் பிளம்பர் மற்றும் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்த நிலையில் தனது உறவினரான விஜயா என்பவரின் மகளான அமலா என்பவரை 20 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தினகரன் அவரது மனைவி அமலா, மாமியார் விஜயா மற்றும் இரு மகன்களுடன் வசித்து வந்தார்.

மது அருந்தும் பழக்கமுடைய தினகரன் தினமும் மது அருந்திவிட்டு வீட்டில் இருப்பவர்களிடம் தகராறு செய்து வந்திருக்கிறார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல தினகரன் மதுபோதையில் வீட்டுக்கு வந்து மனைவி அமலாவிடம் தகராறு செய்து ரகலையில் ஈடுபட்டுள்ளார். அப்போது வீட்டில் இருந்த மாமியார் விஜயா தனது மக்களிடம் தகராறு செய்ய வேண்டாம் என கண்டித்துள்ளார்.

அந்த சமயத்தில் தினகரன் அமலாவை தாக்கியதாக தெரிகிறது. அப்போது தடுக்க வந்த மாமியார் விஜயாவையும் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாமியார் விஜயா மனைவி அமலாவும் தினகரனை தாக்கி கீழே தள்ளி அவர் தலையில் அம்மிக்கல்லை போட்டுள்ளனர். இதில் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் இரவு 11 மணியளவில் நடந்துள்ள நிலையில் இரவு முழுவதும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் மறுநாள் காலை 7 மணியளவில் மாமியார் விஜயா 100 க்கு தொடர்புகொண்டு நடந்தவற்றை கூறி தகவல் தெரிவித்தார்.

அதன்பிறகு தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணிமங்கலம் போலீசார் தினகரனின் உடலை மீட்டு பிரேகாஞ்சிபுரம்த பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தினகரனை கொலை செய்தது நாங்கள் தான் என போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ள நிலையில் மனைவி அமலா மற்றும் மாமியார் விஜயா, ஆகியோரை கைது செய்து மணிமங்கலம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.