
முசாபர்நகர் உத்தர பிரதேசம் பகுதியை சேர்ந்தவர் சல்மான் , இவருக்கு திருமணமாகி ஷாகின் என்ற மனைவி உள்ள நிலையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். திடீரென்று கடந்த வாரம் சல்மானின் தாய்க்கு போன் செய்த ஷாகின் “அத்தை உங்கள் மகன் தூக்கு போட்டு கொண்டார் எனக்கு பயமாக உள்ளது” என கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சல்மானின் தாய் உடனடியாக தனது இளைய மகன் பைசல் உடன் சல்மான் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த சல்மானை பைசல் மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சல்மானை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். சல்மானின் இறப்பில் சந்தேகம் அடைந்த பைசல் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் கூறியுள்ளார். இதனை மறுத்த ஷாகின் பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம் என ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்.
இருப்பினும் பைசல் தனது அண்ணனின் உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளார். பின்னர் உடலை வாங்கி இறுதி சடங்கு செய்து புதைத்துள்ளனர். இரண்டு நாட்களுக்கு பின் வெளியான பிரேத பரிசோதனை முடிவுகள் பைசலுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. அதில் சல்மான் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கோபமடைந்த பைசல் தனது அண்ணி ஷாகின் மீது காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
இதனை அடித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஷாகினிடம் விசாரணை மேற்கொண்டனர். முதலில் குற்றத்தை ஏற்காத ஷாகின் பின்னர் சல்மானை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இந்நிலையில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் “சல்மான் தனது பதவி உயர்வுக்காகவும் அதிக பணம் சம்பாதிக்கும் நோக்கத்திலும் அவரது உயர் அதிகாரிகளுடன் ஷாகினை தகாத உறவில் ஈடுபடுத்தியதும் அதை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு அதையும் விற்றது தெரியவந்தது,
மேலும் கணவன் என ஒரு கட்டம் வரை பொறுத்து சென்ற ஷாகின் சல்மான் செய்யும் கொடுமைகளை தாங்கிக் கொள்ள முடியாமல், அவருக்கு காபியில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து மயக்கம் அடைந்த பின்னர், துணியால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். கொலை செய்தது யாருக்கும் தெரிய கூடாது என சல்மானை தூக்கில் மாட்டியதும்” தெரியவந்துள்ளது.
ஷகினாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், தீர்ப்பிற்கு பிறகு அவரை சிறையில் அடைத்துள்ளனர். கணவனே மனைவியை இவ்வாறு செய்தது அப்பகுதி மக்கள் மற்றும் ஷாகின் குடும்பத்தினரிடையே பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.