POCSO Act Case POCSO Act Case
க்ரைம்

"6 ஆண்டுகளாக பெண்ணை மிரட்டி சீரழித்த முதியவர்!" கணவரின் உதவியோடு காவல்துறையை நாடிய பெண் - கைது செய்யப்படுவாரா?

2025-ம் ஆண்டு வரை மிரட்டல் மற்றும் அச்சுறுத்தி அப்பெண்ணை தொடர்ந்து பாலியல் ரீதியாகச் சுரண்டி வந்ததாகக் கூறப்படுகிறது

Vinvizhi Leninton

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்குப் பிறகு, தனது அண்டை வீட்டுக்காரரான 60 வயது முதியவர் பல ஆண்டுகளாகத் தன்னை மிரட்டியும் அச்சுறுத்தியும் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல்துறை வழக்கு பதிவு வழக்குப் பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

2019-ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை நடந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, 10-ம் வகுப்பு மாணவியாக இருந்த அப்பெண், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்துகொண்டுள்ளார். தனது கணவரின் நல்ல உள்ளதைக் கண்டு அவரிடம் தனக்கு நடந்த அவலத்தை கூறியுள்ளார். அதன்பின்னர், தனது கணவரின் ஆதரவுடன் புகார் அளித்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பெண்ணின் புகாரின்படி, அவர் தனது பயிற்சி மையம் திறப்பதற்காக வெளியே காத்திருந்தபோது, ​​அவரது பக்கத்து வீட்டுக்காரரான தசரத் படேல், தான் நடத்தி வந்த நோயியல் சிகிச்சை மையத்திற்கு அவரை அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அவர், அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. அவர் 2025-ம் ஆண்டு வரை மிரட்டல் மற்றும் அச்சுறுத்தி அப்பெண்ணை தொடர்ந்து பாலியல் ரீதியாகச் சுரண்டி வந்ததாகக் கூறப்படுகிறது என காவல்துறை தெரிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, 2026-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்துகொண்ட அந்தப் பெண், அதன் பிறகு தனக்கு நேர்ந்த கொடுமையைத் தன் கணவரிடம் விவரித்துள்ளார். அதைத் தொடர்ந்து, நீதிக்காகப் போராட முடிவு செய்த அவர், மூத்த காவல்துறை அதிகாரிகளை அணுகியுள்ளார். பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ், குற்றம் சாட்டப்பட்ட தசரத் படேல் (60) மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மிர்சாமுராத் காவல் நிலைய அதிகாரி (எஸ்.எச்.ஓ) கோபால்ஜி குஷ்வாஹா தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்ய காவல்துறை குழுக்கள் முயன்று வருகின்றன, அவர் விரைவில் சிறையில் அடைக்கப்படுவார் என்று காவல் நிலைய அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.