Scotland abuse case Scotland abuse case
க்ரைம்

தாயின் ஆதரவில் குழந்தைகளை சீரழித்த மகன்! "அந்தரங்க உறுப்புகளை சீண்டி வெறிச்செயல்" - கொடூர உச்சத்தின் பின்னணி என்ன?

ஜெனிபரின் மகன் ஸ்டீவன், அமண்டாவின் வாய், மார்பு மற்றும் அந்தரங்க உறுப்புகளில் சீண்டலில் ஈடுபட்டு, அவரைத் தொடர்ந்து துன்புறுத்தியுள்ளார்.

Vinvizhi Leninton

தன்னைத் துன்புறுத்திய வளர்ப்புப் பராமரிப்பாளரும், அந்த பராமரிப்பாளரின் பாலியல் வன்கொடுமை செய்த மகனும் தன் வாழ்க்கையை எப்படிச் சீரழித்தார்கள் என்பது பற்றி ஒரு பெண் வெளிப்படையாகப் பேசியுள்ளார். அமண்டா ப்ரோ, வெறும் ஆறு மாதக் குழந்தையாக இருந்தபோது, ​​79 வயதான ஜெனிஃபர் ராபர்ட்சன் என்பவரது பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டார். அவருக்கு ஐந்து வயது ஆகும் வரை அவர் அங்கேயே இருந்துள்ளார்.

அந்தக் காலகட்டத்தில், அமண்டா ஜெனிஃபரிடமிருந்து தொடர்ச்சியான உடல்ரீதியான தாக்குதல்களைச் சந்தித்து வந்துள்ளார். அதே நேரத்தில் ஜெனிஃபரின் மகனான 52 வயது ஸ்டீவன், அவரைப் பாலியல் வன்கொடுமைக்கும் உள்ளாகியுள்ளார். தற்போது தாய் மற்றும் மகன் இருவருக்கும் எடின்பர்க் உயர் நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்பட்டது. ஸ்டீவன் ராபர்ட்சனுக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதுடன், கூடுதலாக மூன்று ஆண்டுகள் நீட்டிப்பும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெனிபரின் மகன் ஸ்டீவன், அமண்டாவின் வாய், மார்பு மற்றும் அந்தரங்க உறுப்புகளில் சீண்டலில் ஈடுபட்டு, அவரைத் தொடர்ந்து துன்புறுத்தியுள்ளார். மேலும், மற்ற குழந்தையோடும் பாலியல் செயலில் ஈடுபடுமாறும் அமண்டாவினை கட்டாயப்படுத்தியுமுள்ளார். இதில் வேதகனையான விஷயம் இதுபோன்று மற்ற குழந்தைகளுக்கும் நடக்கும், இது ஒரு சாதாரண விஷயம் என்று நினைத்துள்ளார் அமண்டா குழந்தையாக இருந்தபோது. மேலும், ஸ்டீவன் இரவில் அமண்டாவின் படுக்கையறைக்கு வருவது ஒரு தொடர் சுழற்சியாக இருந்துள்ளது. அவர் காயப்படாத ஒரு நாள் கூட தனக்கு நினைவில் இல்லை என்று அமண்டா கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

தனது மகன் இவ்வாறு செய்கிறான் என்று ஜெனிஃபருக்குத் தெரிந்திருந்தும் அவர் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவே இல்லை. "அவர்கள் என் குழந்தைப் பருவத்தை மட்டுமல்ல, நீதியைப் பெறுவதற்காக நான் செலவழித்த இந்த ஆண்டுகளையும் திருடிவிட்டார்கள் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. நான் வாழ விரும்புகிறேன், அவ்வளவுதான். இதுதான் என் முழு வாழ்க்கையாக இருந்து வருகிறது" என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

இது குறித்து அமண்டா, சமூக சேவைகளால் தனது உயிரியல் தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட பிறகு, அவர்களின் பராமரிப்பில் சேர்க்கப்பட்டார். ஸ்காட்லாந்தின் பெர்த்ஷையரில் உள்ள முர்த்லியில் இருந்த ராபர்ட்சனின் வீட்டிற்கு வந்தபோது, ​​ஸ்டீவன் ஏற்கனவே ஒரு பதின்பருவத்தினராக இருந்துள்ளார். அவர்களின் வீட்டிற்கு வந்தபோது தான் ஒரு குழந்தையாக இருந்ததால், துன்புறுத்தல் எப்போது தொடங்கியது என்பது தனக்கு நினைவில் இல்லை என்றும் அமண்டா கூறியுள்ளார்.

மேலும், ஸ்டீவன் தனது குடும்ப வீட்டில் அவரது தாயின் பராமரிப்பில் வைக்கப்பட்டிருந்த சிறுமிகளைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என்று அரசு அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் அவர் குழந்தைகளைத் துன்புறுத்தத் தொடங்கியபோது, ​​அவர்கள் அனைவரும் ஐந்து வயதுக்குட்பட்டவர்களாக இருந்தனர் என மேலும் தெரிவித்தது. மேலும் இது குறித்து பேசிய அமண்டா, "நான் நிறுத்தச் சொல்லவே இல்லை."நான் அங்கேயே நின்று அழுதுகொண்டிருந்தேன், இறுதியில் என்னைச் சுத்தப்படுத்திக்கொள்ளச் சொல்வார்கள், அந்த இடத்தில் வசித்த என் அண்ணன் அல்லது அக்கா என்னைச் சுத்தம் செய்துவிடுவார்" என்று அவர் கூறினார். மேலும், ஜெனிஃபர் ராபர்ட்சன் தனது இல்லத்தில் அமண்டா உட்பட நான்கு சிறு குழந்தைகளைத் துன்புறுத்தியுள்ளார்.

தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு அமண்டா தைரியத்தை வரவழைத்து இதை வெளியே கூறியுள்ளது பாராட்டிற்குரியது என்று பலராலும் கூறப்பட்டுள்ளது. மேலும், தற்போது தாய்க்கும் மகனுக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.