- Haryana crime news 
க்ரைம்

குளியலறையில் கைகள் கட்டப்பட்ட நிலையில்.. மனைவியின் சடலம்! வீட்டில் சிதறிக் கிடந்த பொருட்கள்.. மரணத்தில் நிலவும் மர்மம் என்ன?

அப்பெண்ணின் கணவர் தன் குழந்தைகளுடன் பள்ளியிலிருந்து வீட்டிற்குத் திரும்பியபோது, ​​தன் மனைவி குளியலறையில் இருந்ததைக் கண்டுள்ளார்.

Vinvizhi Leninton

வீட்டில் உள்ள குளியலறையில், கைகள் கட்டப்பட்ட நிலையிலும் முகம் டேப்பால் மூடப்பட்ட நிலையிலும் ஒரு பெண் வெள்ளிக்கிழமை அன்று (அக் 16) சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குருகிராமில், நீது (34) என்ற அந்தப் பெண்ணை குளியறையில் கைகள் கட்டப்பட்ட நிலையிலும் முகம் டேப்பால் மூடப்பட்ட நிலையிலும் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். மேலும், அவரது கணவர் வீட்டிற்குத் திரும்பிய நிலையில், அவர்தான் அந்த சம்பவத்தை முதலில் கண்டுள்ளார். பிரசாந்த் (கணவர்) ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இதுமட்டுமின்றி வீடும் சூறையாடப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கணவர் பிரஷாந்த், தனது மனைவியை மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு சென்றுள்ளார். ஆனால், அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். சம்பவத்தன்று சோனா அருகே உள்ள டோலா கிராமத்தில் உள்ள அவர்களது வீட்டில் பொருட்கள் சிதறிக் கிடந்துள்ளது. இந்த காட்சியானது கொள்ளை நடந்திருக்கக்கூடிய வாய்ப்பிருக்கலாம் என்பதை உணர்த்துவதாக கூறப்படுகிறது.

"தற்போது, இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்காக, அருகிலுள்ள சிசிடிவி கேமராக்களின் காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றோம். தற்போது, ​​கொலைக்கான நோக்கம் கண்டறியப்படவில்லை; வீட்டிலிருந்து ஏதேனும் பொருட்கள் திருடப்பட்டதா? என்பதும் உறுதி செய்யப்படவில்லை. இந்த சம்பவம் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது, விரைவில் முழு விவரமும் தெரியவரும்," என்று ஒரு மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

காவல்துறையின் தகவல்படி, அப்பெண்ணின் கணவர் தன் குழந்தைகளுடன் பள்ளியிலிருந்து வீட்டிற்குத் திரும்பியபோது, ​​தன் மனைவி குளியலறையில் இறந்து இருந்ததைக் கண்டுள்ளார். அதன் பின்னர் இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தகவல் கிடைத்ததும், ஒரு காவல்துறை குழு தடயவியல் ஆய்வகக் குழுவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

தனது புகாரில் பிரசாந்த், வெள்ளிக்கிழமை காலை தன் குழந்தைகளுடன் பள்ளிக்குச் சென்றதாக அவர் தெரிவித்துள்ளார். பின்னர், மதியம் சுமார் 2 மணியளவில் அவர் வீடு திரும்பியபோது, ​​இந்த சம்பவத்தை பார்த்ததாக குறிப்பிட்டுள்ளார்.

வீட்டில் பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டதும் ஏதோ சரியில்லை எனச் சந்தேகித்த அவர், வீட்டைச் சோதனையிட்டபோது குளியலறையில் தன் மனைவியைக் கண்டுள்ளார். அவரது கைகள் கட்டப்பட்ட நிலையில், முகம் டேப்பால் மூடப்பட்டுள்ளது. இதை பார்த்து அதிர்ந்து அவர், உடனடியாக தன் மனைவியை சோனாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்.

அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்ததாக புகார்தாரர் தெரிவித்துள்ளார். தற்போது, அடையாளம் தெரியாத குற்றவாளி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.