தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம் கீர்த்திப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் 28 வயதுடைய நாகேஷ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 25 வயதுடைய மம்தா என்பவருக்கும் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தையும் 6 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை என இரண்டு குழந்தைகள் இருந்தனர். நாகேஷ் விவசாயம் செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். இந்நிலையில் நாகேஷிற்கும் அதே பகுதியை சேர்ந்த 42 வயதுடைய சுஜாதா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சுஜாதாவின் கணவர் உயிரிழந்த நிலையில் அவர் குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. எனவே நாகேஷ் மற்றும் சுஜாதா தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்திருக்கின்றனர். ஒரு கட்டத்தில் கணவரின் தகாத உறவை அறிந்த மம்தா சுஜாதா மற்றும் அவரது கணவர் நாகேஷை கண்டித்துள்ளார். ஆனால் இருவரும் தங்களது உறவை கைவிடாமல் தொடர்ந்து பழகி வந்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த மம்தா, நாகேஷ் மற்றும் சுஜாதாவின் தகாத உறவு குறித்து ஊரின் பெரியவர்களிடம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து ஊர் பெரியவர்கள் இருவரையும் அழைத்து பஞ்சாயத்து செய்து முறையாக நடந்து கொள்ளுமாறு அறிவுரை கூறி அனுப்பி வைத்திருக்கின்றனர். எனவே நாகேஷ் சுஜாதாவிடம் பழகுவதை நிறுத்திக் கொண்டுள்ளார். ஆனால் நாகேஷை விட்டு பிரிய மனமில்லாத சுஜாதா தொடர்ந்து தன்னுடன் பழக வேண்டும் என நாகேஷை வற்புறுத்தி வந்திருக்கிறார்.
மேலும் மம்தா உயிருடன் இருக்கும் வரை நாகேஷுடன் சேர முடியாது என நினைத்த சுஜாதா மம்தாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி கடந்த சனிக்கிழமை (ஜன 31) ஆம் தேதி காலை வீட்டில் நாகேஷ் இல்லாததை அறிந்த சுஜாதா மிளகாய் பொடி, கத்தி மற்றும் பெட்ரோலுடன் மம்தா வீட்டிற்கு சென்று அங்கு ஆறு மாத குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டிருந்த மம்தா மற்றும் குழந்தை மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்திருக்கிறார். மம்தாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு மம்தா மற்றும் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் உயிரிழந்ததாக தெரிவித்த நிலையில் தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதற்கிடையில் தலைமறைவான சுஜாதா நாகேஷிற்கு போன் செய்து “நான் உன் கூட வாழனும், எனக்கு நீ தான் அதனால உன் பொண்டாட்டியையும் குழந்தையையும் கொன்னுட்டான்” என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து தனிபடை அமைத்து சுஜாதாவை கைது செய்த போலீசார் கொலை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த கொலைக்கும் நாகேஷிற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா அல்லது சுஜாதா மட்டும் தான் செய்தாரா என்றும் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். வீட்டில் குழந்தையுடன் இருந்த பெண்ணை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்