Kallakurichi DMK functionary complaint 
க்ரைம்

திருமண ஆசை காட்டி.. திமுக நிர்வாகி செய்த லீலை! பலமுறை பெண்ணுடன் உடலுறவில் இருந்துவிட்டு.. பணம் பறிப்பு! வைரலாகும் பெண்ணின் ஆடியோ

அந்தப் பெண்மணிக்கு தொடர்ந்து காதல் வலை வீசி திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக் கூறிவந்துள்ளார். மேலும், அந்தப் பெண்ணின் இல்லத்திலேயே அடிக்கடி உல்லாசத்தில் ஈடுபட்டிருக்கிறார் ஆஷிக்.

Vinvizhi Leninton

திமுக-வை சேர்ந்த கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பொறுப்பு வகித்து வரும் ஆஷிக் என்பவர் திருமணமாகாத இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக்கூறி அவரோடு உல்லாசத்தில் இருந்துவிட்டு பணம் பறித்ததுள்ளார். இப்போது அந்த பெண்ணை யாரென்று தெரியாது என்பது போல் நாடகமாடிய நிலையில் அந்த பெண் அவர் மீது புகாரளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அஷத்பாஷா என்கிற ஆஷிக். இவர் திமுக கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பொறுப்பு வகித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு கடந்த 2025-ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த 39 வயது மதிக்கத்தக்க திருமணம் ஆகாத பெண்ணிடம் நட்பு ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்மணி கள்ளக்குறிச்சி அருகே உள்ள கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பு கொண்டு, அந்த பெண்ணிடம் தொலைபேசி எண்ணை வாங்கி பேசியுள்ளார். அப்போது தான் ஒரு திமுக நிர்வாகி என்றும் அமைச்சர் ஒருவரின் நேரடி உதவியாளர் என்றும் மேலும் தன்னை தொழிலதிபர் என்றும் அந்த பெண்ணிடம் அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்.

நாட்கள் செல்ல செல்ல, அந்த நட்பினை காதலாக மாற்ற முயன்றுள்ளார். அந்தப் பெண்மணிக்கு தொடர்ந்து காதல் வலை வீசி திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக் கூறிவந்துள்ளார். மேலும், அந்தப் பெண்ணின் இல்லத்திலேயே அடிக்கடி உல்லாசத்தில் ஈடுபட்டிருக்கிறார் ஆஷிக். மேலும் அவ்வபோது அந்த பெண்மணியிடம் பணம் பறித்தும் வந்துள்ளார். மொத்தமாக அந்த பெண்ணிடம் இருந்து மூன்று லட்சம் வரை பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து சிறிது நாட்களிலே அந்தப் பெண்ணை தவிர்த்து வந்துள்ளார். பின்னர், அந்த பெண் தான் கொடுத்த பணத்தை திரும்பி கேட்க அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவரை புறக்கணித்ததாகவும் மேலும் நேரில் சென்று கேட்டபோது தன்னுடைய சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாகவும், தன்னை அடித்து உதைத்ததாகவும் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஷிக் மீது அந்த பெண் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர், ஆஷிக் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆஷிக் தற்பொழுது மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திமுக மாவட்ட நிர்வாகி பெண் ஒருவரிடம் தவறாக பழகி மூன்று லட்சம் வரை பணத்தையும் பறித்துக் கொண்டு அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் தற்போது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் அந்த பெண் அவரோடு பேசும் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அந்த பெண் அழுதவண்ணம் பேசியுள்ளார். ஊருக்குள் வெறும் தண்ணீர் கேன் போட்டுக்கொண்டிருந்த தன்னை (ஆஷிக்) தொழிலதிபர் என்றுகூறி ஏமாற்றியதாக அவர் ஆஷிக்கிடம் கண்ணீர் மல்க பேசுவது போன்ற ஆடியோ வெளியாகியுள்ளது. மேலும், அந்த பெண்ணை யாரென்றே தெரியாது என்பது போன்று ஆஷிக் அந்த பெண்ணிடம் பேசுகிறார். தான் கஷ்டகாலத்தில் இருந்ததைப் பயன்படுத்தி தன்னோடு உளரவில் இருந்துவிட்டு தற்போது ஏமாற்றுகிறார் என்று அந்த பெண் ஆஷிக்கிடம் கண்ணீர் மல்க பேசியுள்ளார்.

DMK leader cheating case

இதனையடுத்து, தவெக ஐடி விங் தனது சமூகவலைதளப்பக்கத்தில் இந்த சம்பவத்தினை சுட்டிக்காட்டி ஒரு பதிவுஒன்றினை பதிவிட்டுள்ளனர். அதில், "காலம் காலமாக Abuser-களை உருவாக்குவதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டவர் Senior Generational abuser!. கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகி ஒருவர், ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டுத் தலைமறைவாகியுள்ளார்.

தமிழ்நாட்டுப் பெண்களை ஆபாசமாக வசைபாடுவது மட்டுமின்றி, அவர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதும் திமுகதான். திமுகவிடமிருந்துதான் தமிழ்நாட்டுப் பெண்களைப் பாதுகாக்க வேண்டியிருக்கிறது. தலைமையே பெண்களை ஆபாசமாகப் பேசினால், அடிமட்டத் தொண்டன் பெண்களை வேறு எப்படிப் பார்ப்பான்? பி.கு: இதுவரை திமுகவினரால் சீரழிக்கப்பட்டப் பெண்களுக்காக இதுவரை திமுக தலைமையோ திமுகவினரோ குரல் கொடுத்ததில்லை" என்று காட்டமாக ஒரு பதிவினை பதிவிட்டுள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.