சென்னை திருவொற்றியூர் மேற்கு மாட வீதி தெருவை சேர்ந்தவர் டில்லி பாபு. ஆட்டோ ஓட்டுனரான இவருக்கு திருமணம் ஆகி டில்லி ராணி என்ற மனைவியும் உள்ளார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த நவநீதம் என்பவரிடம் தெரிந்தவர்களுக்கு டில்லி பாபு 3 லட்ச ரூபாய் பணத்தை வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. கடந்ந மூன்று ஆண்டுகளாக 18 லட்சம் ரூபாய் வரை டில்லி ராணி வட்டி பணம் கட்டியதாகவும், அசல் பணம் 3 லட்சம் ரூபாயை நவநீதம் கேட்டதாகவும் சொல்லப்படுகிறது. டில்லி ராணி பணம் கொடுக்காததால் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் நவநீதம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் இரு தரப்பினரையும் அழைத்து பேசி சமாதானம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.
கடனை திருப்பி கேட்ட விவகாரத்தில் தகராறு ஏற்பட்டதால், கடந்த ஜூலை மாதம் திருவொற்றியூர் காவல் நிலையத்தில், டெல்லி ராணி மற்றும் மகன் பிரதீப் மீது நவநீதம் புகார் அளித்துள்ளார். புகாரின் பெயரில் பிரதீப் மீது பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து திருவொற்றியூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். குற்றம் சாட்டப்பட்ட பிரதீப்புக்கு ஆதரவாக வழக்கறிஞர் ராஜேஷ் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடி குற்றம் நிரபராக்காத்ததால் அவரை திருவொற்றியூர் காவல் நிலையத்தில் ஒரு மாதம் காலை மாலை இருவேளையும் கையெழுத்து போட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு மாதம் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்த பிரதீப் கடந்த 30 வரை தினமும் கையெழுத்திட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பிரதீப் ராஜ் மற்றும் அவரது தாய் டில்லி ராணி காவல் நிலையத்திற்கு வந்த நிலையில் நவநீதன் மற்றும் அவரது உறவினர் மீதும் புகார் அளித்துள்ளனர். அதில் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார் பிரதீப். இதன் பிறகு திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் பிரதீப்பை அழைத்து, ‘உங்களுக்குள் பகை இருக்கிறது. மாறி மாறி வெட்டிக் கொள்வீர்கள் எனத் தகவல் வருகிறது’ எனக் கூறியுள்ளார். அதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று பிரதீப் கேட்டதிற்கு, ‘நீ என்ன பெரிய ஆளா? கையை, காலை உடைத்து விடுவேன். உயிரோடு இருக்க மாட்டாய். உன்னைச் சுட்டு விடுவேன். வெட்டி திருச்செந்தூர் கடலில் கரைப்பேன். பொய் வழக்கு போட்டுக் கைது செய்வேன்’ என்று மிரட்டியதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை திருவொற்றியூர் மேற்கு மாட வீதியில் நின்று கொண்டிருந்த பிரதீப்பை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கத்தியால் வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர். பிரதீப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த திருவொற்றியூர் போலீசார் பிரதீப்பின் உடலை கைப்பற்றினர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் திருவொற்றியூர் மேற்கு மாட வீதியில் விநாயகர் சிலை வைப்பதற்கு ஏற்பட்ட முன்விரோதம் இருக்கலாம் என்றும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் ஏற்பட்ட முன்விரோதம் ஏற்பட்டிருக்கலாம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிரதீப் கந்துவட்டி பிரச்சனையில் முன்விரோதம் காரணமாக நேற்று இரவு மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தனிப்படை அமைக்கப்பட்டு மாதவரம் பகுதியில் பதுங்கி இருந்த நாராயணன் (எ) நவீன் (32), ஹரி கிருஷ்ணன் (21), ஜபார் (24) லோகேஷ் (27) ஆகிய 4 பேரை திருவொற்றியூர் ஆய்வாளர் அலெக்ஸ் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பட்டா கத்தியுடன் 4 பேரையும் கைது செய்தனர். திருவொற்றியூர் காவல் நிலையத்தில் வைத்து 4 பேரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில் பிரதீப்பின் தாய் கந்துவட்டி வாங்கியதாகவும் அதனை வட்டியும் முதலுமாக தர வேண்டுமென மிரட்டுவதாகவும் புகார் அளித்துள்ளார். மர்ம கும்பல் திருவொற்றியூர் மேற்கு மாட வீதி அருகே ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் வெட்டி படுகொலை செய்து உள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருவொற்றியூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டு வருகிறது
உயிரிழந்த பிரதீப்பின் தாய் தனது “மகனை வெட்டிக் கொலை செய்துவிட்டார்கள்” என்று கண்ணீர் மல்க அழுது புலம்பும் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்