சென்னை மாவட்டம் கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் 22 வயது இளம் பெண் ஷாலினி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பிசியோதெரபிஸ்ட் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். எனவே பயிற்சிக்காக பெரம்பூரில் உள்ள பிசியோதெரபிஸ்ட் மருத்துவரான 27 வயதுடைய கார்த்திகேயன் என்பவர் நடத்தி வரும் மருத்துவமனையில் கடந்த 17ஆம் தேதி வேலைக்கு சேர்ந்துள்ளார். அங்கு மாணவிக்கு பயிற்சியளித்த மருத்துவர் கார்த்திக் பிசியோதெரபிஸ்ட் தேவைப்படும் சிலருக்கு வீடுகளுக்கு சென்று உடற்பயிற்சி செய்ய கற்றுக் கொடுத்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் நேற்று காலை 6 மணி அளவில் இளம் பெண் வேலை செய்யும் மருத்துவமனையின் உரிமையாளர் டாக்டர் கார்த்திக் ஷாலினிக்கு போன் செய்து ஒரு மணி அளவில் சில வீடுகளுக்கு சென்று பிசியோதெரபிஸ்ட் பணி செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் இளம் பெண் நேற்று 11 மணியளவில் வீட்டில் இருந்து கிளம்பி வந்துள்ளார். பின்னர் இரண்டு வீடுகளுக்கு சென்று பிசியோதெரபி செய்த நிலையில் ஒரு பெண்ணிற்கு பிசியோதெரபிஸ்ட் செய்ய வேண்டும் என கூறி ஷாலினியை அவரது காரில் ஏற்றி சென்றிருகிறார்.
அப்போது காரில் இருந்த குளிர் பணத்தை எடுத்து கார்த்திக் ஷாலினியிடம் குடிக்க கொடுத்திருக்கிறார். மருத்துவர் தானே என அதனை நம்பி குடித்த ஷாலினி சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்திருக்கிறார். இதனை தொடர்ந்து மருத்துவர் கார்த்திகேயன் ஷாலினியை கொளத்தூர் ஜெயந்தி நகர் இரண்டாவது மெயின் ரோட்டில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்று அப்பெண்ணை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் மயக்கத்தில் இருந்து விழித்து பார்த்த பெண் தனது நிலையை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின்னர் எழுந்து தனது உடைகளை சரி செய்து கொண்டு அந்த இடத்திலிருந்து வெளியே வந்து தனது அக்காவிற்கு போன் செய்து நடந்தவற்றை கூறியுள்ளார். இதனை அறிந்த உடன் இளம் பெண்ணின் உறவினர்கள் கொளத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து கொளத்தூர் வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பெரம்பூர் மணியம்மை நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் 27 என்ற பிசியோதெரபிஸ்ட் மருத்துவரை கைது செய்து அவர் மீது கற்பழிப்பு வழக்கு உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்