

வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதியை சேர்ந்த 11 வயதுடைய சிறுமி, இவர் வேலூரில் உள்ள புகழ் பெற்ற தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டில் இருந்து பழிக்கு தினந்தோறும் பள்ளி வாகனத்தில் சென்று வருவதை மாணவி வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். இவ்வாறு தினம்தோறும் பள்ளி வாகனத்தில் சென்று வரும் மாணவியிடம் அந்த பள்ளி பேருந்தின் ஓட்டுநர் பேசி பழகி வந்திருக்கிறார். எனவே மாணவியும் நன்றாக பேசி வந்திருக்கிறார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழக்கம் போல மாணவி பேருந்தில் பள்ளிக்கு சென்றுவிட்டு மீண்டும் மாலை வீடு திரும்புவதற்கு பேருந்திற்கு சென்ற போது ஓட்டுநர் சிறுமியை தவறாக தொட்டு பேசியதாக சொல்லப்படுகிறது. அப்போது மாணவிக்கு என்ன நடக்கிறது என தெரியாமல் வழக்கம் போல வீட்டிற்கு சென்றிருக்கிறார். பின்னர் தொடர்ந்து பேருந்து ஓட்டுநர் மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்திருக்கிறார்.
இதனை தொடர்ந்து மாணவியுடன் இருக்கும் அவரது தோழிகள் சிலரிடமும் ஓட்டுநர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அச்சம் அடைந்த சிறுமிகள் தங்களுக்கு நடந்தது குறித்து அவர்களது பெற்றோர்களிடம் தெரிவித்த நிலையில் இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் உடனடியாக இதுகுறித்து பள்ளி நிர்வாகம் மற்றும் வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் காவல்துறையினர் பேருந்து ஓட்டுநரான குடியாத்தம் பகுதியை சேர்ந்த 61 வயதுடைய தேவேந்திரனை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் மாணவிகளிடம் பாலியல் செந்நடலில் ஈடுபட்டது உறுதியானது. எனவே அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பத செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். தனியார் பள்ளி பேருந்தில் அந்தப் பள்ளியின் பேருந்து ஓட்டுநர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.