மத்திய பிரதேச மாநிலம், போபாலில் உள்ள நிஷாத்புர பகுதியை சேர்ந்தவர் சமீர். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கோந்திய மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் சியா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் தொடர்ந்து நெருங்கி பழகி வந்த நிலையில் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு போனில் காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சியாவின் காதல் அவரது பெற்றோருக்கு தெரிந்த நிலையில் சமீரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த சியா நேரடியாக சமீர் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.
அப்போது சமீருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த சியா சமீரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டு அதே வீட்டில் தங்கி இருந்திருக்கிறார். எனவே சமீர் மனைவி மற்றும் சியா இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் இவர்கள் போடும் சண்டையை குறித்து கேட்டு கண்டித்திருக்கின்றனர். இதனால் ஆத்திரமடைந்த சமீரின் மனைவி தனது குழந்தைகளை அழைத்து கொண்டு தாய் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.
எனவே இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட சியா “உனது மனைவி தான் உன்னை விட்டு போய்விட்டாள் எனவே என்னை இப்போது திருமணம் செய்து கொள்” என தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த சமீர் “ஏற்கனவே எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர் இப்போது உன்னை திருமணம் செய்து கொண்டால் என்னை ஊர் மக்கள் அசிங்கமாக பார்ப்பார்கள்” என கூறி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். எனவே சியா 5 லட்சம் பணம் கொடுத்தால் சமீரை விட்டு விலகிச் செல்வதாக கூறியுள்ளார்.
இதனால் சமீர் மற்றும் சியாவிற்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது அப்பொய்த்து ஆத்திரமடைந்த சமீர் சியாவை கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார். பின்னர் சியாவின் உடலை சமீர் தனது குடும்பத்தினரின் உதவியுடன் வீட்டில் இருந்த இரும்பு பெட்டியில் போட்டு அந்த பெட்டியை அருகில் உள்ள செப்டிக் டேங்கில் வீசியிருக்கிறார். சியாவின் உடல் அழுக தொடங்கிய நிலையில் செப்டிக் டேங்கில் இருந்து அதிக துர்நாற்றம் வெளியேறியுள்ளது. இதனை கவனித்த அப்பகுதியில் விள்ளயடி கொண்டிருந்த குழந்தைகள் இது குறித்து அப்பகுதி மக்களிடம் தெரிவித்திருக்கின்றனர்.
அதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரசெப்டிக் டேங்கில் இருந்த இரும்பு பெட்டியை தீயணைப்பு துறையினர் உதவியுடன் மெட்டு திறந்து பார்த்த போது அதில் அள்ளுகிய நிலையில் பெண்ணின் உடல் கிடந்துள்ளது அந்த பிணத்தின் கையில் இருந்த டாட்டூவை வைத்து அடையாளம் கண்டுபிடித்த அப்பகுதி மக்கள் இறந்த பெண் சமீரின் வீட்டில் இருந்ததாக தெரிவித்தனர். எனவே சமீரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் அந்த பெண்ணை கொலை செய்து செப்டிக் டேங்கில் வீசியது தெரியவந்தது. இரும்பு பெட்டியில் அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.