“சிறுமிகளுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற தந்தை” - வாயில் நுரையுடன் கிடந்த வாலிபர்… மகள்களின் சாவுக்கு காரணம் தாயின் கள்ளக்காதலா?

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த விடுதியில் பணிபுரியும் ஊழியர்கள் உடனடியாக மாமல்லபுரம் காவல்...
“சிறுமிகளுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற தந்தை” - வாயில் நுரையுடன் கிடந்த வாலிபர்… மகள்களின் சாவுக்கு காரணம் தாயின் கள்ளக்காதலா?
Published on
Updated on
2 min read

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள ஒத்தவாடை தெரு பகுதியில் தனியார் விடுதியில் கடந்த (பிப் 9) ஆம் தேதி அன்று காலை 11 மணியளவில் சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய பிரதீப் என்பவர் தனது இரு குழந்தைகளான 7 வயதுடைய லியா மற்றும் 4 வயதுடைய சுபிக்ஷா என்ற இரண்டு பெண் குழந்தைகளுடன் தனியாக அறை எடுத்து தங்கி வந்துள்ளார். நேற்று முன்தினம் காலை நீண்ட நேரம் ஆகியும் கதவைத் திறக்காததால் சந்தேகம் அடைந்த விடுதியில் பணிபுரியும் நபர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வாயில் நுரை தப்பி கொண்டு மயங்கிய நிலையில் பிரதீப்பும் அவருக்கு அருகில் இரண்டு குழந்தைகள் இறந்த கிடந்திருக்கின்றனர்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த விடுதியில் பணிபுரியும் ஊழியர்கள் உடனடியாக மாமல்லபுரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாமல்லபுரம் காவல்துறையினர் இறந்த இரண்டு குழந்தைகளின் பிரேதங்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் உயிருக்கு போராடிய தந்தை பிரதீப்பை மீட்டு முதலுதவிக்காக பூஞ்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து மாமல்லபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

Admin

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் பிரதீப்பின் மனைவி பிரீத்திக்கும் அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு வாலிபருக்கு இடையே திருமணத்திற்கு மீறிய உறவு இருந்ததாக சொல்லப்படுகிறது. எனவே கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதன் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பாக சென்னை புழல் காவல் நிலையத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு பிரதீப் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அது விசாரணையில் உள்ளது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக கடந்த இரு மாதங்களாக மன உளைச்சலில் இருந்த பிரதீப் குழந்தைகளுடன் விடுமுறை நாளில் மாமல்லபுரம் வருகை தந்து தனியார் நட்சத்திர விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்த போது அறையில் வைத்து குழந்தைகளுக்கு காலை உணவில் பெயிண்ட் அடிக்க பயன்படுத்து தின்னர் என்ற ரசாயன பொருளை கலந்து கொடுத்துள்ளார். அதனை தொடர்ந்து அவரும் அந்த ரசாயனத்தை மதுவில் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. இருப்பினும் போலீசார் தற்கொலைக்கான முழுமையான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பிரதீப் மிகத் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்பதையும் போலீசார் தெரிவித்தனர்.

Admin

(குறிப்பு: மன அழுத்தம் அல்லது தற்கொ*லை எண்ணம் ஏற்பட்டால், அரசு உதவி மையமான 104 அல்லது சினேகா உதவி மையம் 044-24640050 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.)

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com