இன்றைய சமூகத்தில், இளம் தலைமுறையினர் மிகவும் சென்சிட்டிவான மனநிலையில் தான் இறக்கின்றனர். மேலும் வாழ்வின் சிறு பிரச்சனைகளுக்கு எல்லாம் சாவது எப்போதுமே தீர்வாகாது. படிக்கும் வயதில் சில விஷயங்களை கையாளும் பக்குவத்தை மாணவர்கள் வளர்க்காமல் விடுவதால், சில சமயங்களில் வாழ்வே நரகமாகிவிடுகிறது.
மேலும் போராட்ட குணமற்ற மனிதன் தன் வாழ்வையும், தன் உடன் சேர்த்தவர்கள் வாழ்வையும் நரகமாக்கி விடுகிறான். அப்படி ஒரு சம்பவம்தான் மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் நடந்துள்ளது. மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் 19 வயது இளைஞர் ஒருவர் கடந்த 30 -ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார்.
ஆனால் அவர் தற்கொலை செய்துகொண்ட காரணம்தான், மிக மோசமான ஒன்று. ஜார்க்கண்டைச் சேர்ந்த அந்த 19 வயது இளைஞர், தனது சொந்த ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து, அவரை திருமணம் செய்துகொள்ள விரும்பியிருக்கிறார். இருப்பினும், அவரது குடும்பத்தினர் திருமணத்திற்கு சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட 21 வயதை அடையும் வரை காத்திருக்குமாறு கேட்டுக் கொண்டனர், இது அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த நவம்பர் 30 - ஆம் தேதி வீட்டில் யாருமே இல்லாத நிலையில் அவர், தனது வீட்டின் கூரையில் தாவணியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வீட்டிற்கு வந்தபோது, தூக்கில் மகன் தொங்கிக்கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரது குடும்பத்தினர் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டிருந்தார்.
போலீசார் விபத்து மரணம் என வழக்குப் பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.