zomato man  
க்ரைம்

நடுராத்திரி.. சென்னையில் இப்படியும் நடக்குது! சொமேட்டோ" உடையில் பலாத்கார முயற்சி!

செல்போனில் படம் பிடித்தது தெரிய வருகிறது,இது தொடர்பாக கிருஷ்ணமூர்த்தியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை

Anbarasan

கோட்டூர்புரம் வெஸ்ட் கெனால் பகுதியில், நேற்று( ஏப்ரல் 3) நள்ளிரவு 2 மணிக்கு, சொமேட்டோ உடை அணிந்து வந்த மர்ம நபர் 3 வயது குழந்தையின் தாயாரை பாலியல் பலாத்காரம் செய்யமுயற்சித்துள்ளான். பெண் கூச்சலிட்ட நிலையில் செல்போனை மட்டும் எடுத்து சென்றுள்ளான்.

அந்த பெண் கூச்சலிட்ட நிலையில் அங்கிருந்த பொது மக்கள், அந்த நபரை துரத்தி சென்ற பரபரப்பு காணொளி வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தரமணியில் வைத்து போலீசார் கிருஷ்ண மூர்த்தியை கைது செய்துள்ளனர்.

மேலும் விசாரணையில் சைதாப்பேட்டை சின்னமலை பகுதியிலும், இதே போன்று வீட்டினுள் அத்துமீறி நுழைந்த போது பொதுமக்களிடம் கையும் களவுமாக மாட்டிக்கொண்டு தர்ம அடி வாங்கியிருக்கிறார்.

கிருஷ்ணமூர்த்தி செல்போனை ஆய்வு செய்த, போது அந்த பெண்ணை, செல்போனில் படம் பிடித்தது தெரிய வருகிறது,இது தொடர்பாக கிருஷ்ணமூர்த்தியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்