யூடியூப் பார்த்து "வாட்டர் ஆப்பிள்" விவசாயம்.. நினைத்துப் பார்க்க முடியாத வாழ்க்கை பெற்ற விவசாயி"! அடிச்சா இப்படி யோகம் அடிக்கணும்!

அவ்வப்போது விவசாயிகளின் புதிய விவசாயம் குறித்து தெரிந்து கொண்டு வந்துள்ளார், இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் அதிகமாக விளையக்கூடிய
formar and water apple
formar and water apple
Published on
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் மா, புளி, தென்னை பயிர்களை மட்டுமே பயிரிடும், விவசாயங்களுக்கு  மத்தியில் யூடியூபில் பார்த்து ஊடுபயிராக வாட்டர் ஆப்பிளை பயிரிட்டு அதிக லாபம் சம்பாதிக்கும் விவசாயி.

திண்டுக்கல் மாவட்டம, நத்தம் அருகேயுள்ள ராவுத்தன்பட்டியை  சேர்ந்தவர் சின்னன்(55). இவர் அப்பகுதி  விவசாயிகளின் பிரதான தொழிலான மா, தென்னை, புளி ஆகியவற்றை விவசாயம் செய்து வந்து உள்ளார்.

அப்போது யூடியூபில் விவசாயம் தொடர்பான வீடியோக்களை பார்த்து, அவ்வப்போது விவசாயிகளின் புதிய விவசாயம் குறித்து தெரிந்து கொண்டு வந்துள்ளார், இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் அதிகமாக விளையக்கூடிய வாட்டர் ஆப்பிள்  விவசாயத்தை பார்த்து உள்ளார்.

அப்போது யூடியூப் மூலம் தொடர்பு கொண்டு வாட்டர் ஆப்பிள்  செடியை வாங்கி தனது தோட்டத்தில் பயிரிட்டு வளர்த்துவந்துள்ளார். வாங்கிய அந்த ஒரு செடியில் இருந்தே நான்கு தினங்களுக்கு ஒரு முறை 20 முதல் 25 கிலோ வரை வாட்டர் ஆப்பிலானது  வேளாண்மை ஆகியுள்ளதது.

இந்த வாட்டர் ஆப்பிளானது, ரத்த அழுத்தம்,சர்க்கரை நோய், பெண்கள் மகப்பேறு காலங்களில் நீர் சத்தினை கொடுக்கக்கூடிய மருத்துவ குணம் நிறைந்தவை என்பதால் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்பொழுது இவர் தோட்டத்தில் ஊடுபயிராக சுமார் 15-க்கும் மேற்பட்ட வாட்டர் ஆப்பிள் மரங்களை வைத்து வேளாண்மை செய்து வருகிறார்.இங்கு விளையக்கூடிய இந்த வாட்டர் ஆப்பிள்களை மதுரை, திண்டுக்கல், நத்தம் போன்ற இடங்களுக்குச் சென்று பழக்கடைகளில் விற்பனை செய்து வருவது மட்டுமின்றி சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் நபர்கள், நீர்ச்சத்து இன்றி காணப்படும் பிரசவகால பெண்களுக்கும் இவர் நேரடியாக கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறார்.

ஒரு கிலோ வாட்டர் ஆப்பிலானது 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. நத்தம் பகுதியில் யூடியூபில் பார்த்து மாற்று விவசாயம் செய்து, அதிக லாபம் சம்பாதிக்கும் விவசாயி சின்னனை  பாராட்டுவது, மட்டுமின்றி இவரைப் பார்த்து மற்ற விவசாயிகளும் தங்களது தோட்டங்களில் ஊடுபயிராக வாட்டர் ஆப்பிள்  விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com