மாவட்டம்

“11 வயது சிறுமி விஷம் குடித்து தற்கொலை” - பெற்றோர்கள் கண்டித்ததால் விபரீதம்.. கடையில் வாங்கிய தின்பண்டத்தால் வந்த வினை!

இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தேவி ஸ்ரீ என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டில் இருந்த கரப்பான்...

Mahalakshmi Somasundaram

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அடுத்த பாரிவாக்கத்தைச் சேர்ந்தவர் அஜித். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் பக்கத்து ஊரை சேர்ந்த சிந்து என்பவருடன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது இவர்களுக்கு 11 வயதில் தேவிஸ்ரீ என்ற மகளும் ஒரு மகனும் உள்ளனர்.  இந்நிலையில் இன்று தேவி ஸ்ரீ வீட்டில் இருந்த கரப்பான் பூச்சி மருந்தை குடித்துவிட்டு வாயில் நுரை தள்ளியபடி மயங்கி உள்ளார். 

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் தேவிஸ்ரீயை மீட்டு  பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.  அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து பூந்தமல்லி போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில் தேவி ஸ்ரீ பெற்றோர் வீட்டில் வைத்திருக்கும் பணத்தை அவர்களுக்கு தெரியாமல் எடுத்துச் சென்று கடைகளில் தின்பண்டங்களை வாங்கி சாப்பிட்டு வந்துள்ளார். நீண்ட நாட்களாக பணம் காணாமல் போவது குறித்து பேசி வந்த கணவன் மனைவிக்கு தேவிஸ்ரீ எடுத்து செல்வது தெரியவந்தது. இதையடுத்து சிறுவயதில் செய்யும் பழக்கம் தான் தொடரும் என நினைத்து வருத்தமடைந்த பெற்றோர் இருவரும் சேர்ந்து மகளை கண்டித்து அறிவுரை கூறியுள்ளனர். 

இதனை அவரது தந்தை சற்று கோபத்துடன் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தேவி ஸ்ரீ என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டில் இருந்த கரப்பான் பூச்சி மருந்தை எடுத்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்த நிலையில்,  தற்கொலைக்கு வேறு காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  தந்தை கண்டித்ததால் 11 வயது மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது, மன உளைச்சல் இருந்தால் அழைக்க வேண்டிய எண்-1800-599-0019.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.