muniyandi  Admin
மாவட்டம்

13 வயதில் காதலி.. அழைத்து வந்த 23 வயது இளைஞன்.. குடிச்சது பாய்சன் இல்லையாம் - தெரிஞ்சவுடன் கிரேட் எஸ்கேப்!

இவர்கள் இருவரும் காதலித்து வருவது சிறுமியின்

Anbarasan

சென்னை செங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி, இவருக்கு 23 வயதாகும் நிலையில் அதே பகுதியை சேர்ந்த, 13 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து வருவது சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வர, பெற்றோர்கள் போலீசில் புகாரளித்துள்ளனர்.

இவர்கள் அளித்த புகாரின் பேரில், சிறுமி மற்றும் இளைஞர் முனியாண்டியை விசாரிக்க போலீசார் அழைத்து உள்ள நிலையில், பயந்து போன இளம் சிறுசுகள் டெட்டால் குடித்துவிட்டு விஷம் குடித்ததாக தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், இருவரையும் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.இரண்டு நாட்கள் சிகிச்சை அளித்த நிலையில், இவர்கள் குடித்து விஷம் இல்லை டெட்டாயில் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இருப்பினும் வயிறை சுத்தம் செய்து, தொடர்ந்து இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.இந்த நிலையில் பெற்றோர்கள் தங்களைப்பிரித்து விடுவார்கள், என்று எண்ணிய காதல் ஜோடிகள் தற்போது சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இருந்து தப்பித்து ஓட்டம் பிடித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாய், ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இதுகுறித்து மருத்துவமனையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்