மாவட்டம்

அறந்தாங்கியில் 250 கிலோ மாம்பழங்கள் அழிப்பு...காரணம் என்ன!!

Malaimurasu Seithigal TV

அறந்தாங்கியில் ரசாயனம் பயன்படுத்தி பழுக்க வைத்து விற்பனை செய்த சுமார் 250 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சி பகுதியில் உள்ள பழக்கடைகளில் நேற்று திடீரென உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி மற்றும் நகராட்சி அதிகாரிகள் சோதனைகள் ஈடுபட்டனர்.  அப்போது ரசாயனம்  பயன்படுத்தி பழுக்க வைத்து விற்கப்பட்ட  250 கிலோ மாம்பழங்கள் மற்றும் அழுகிய இதர பழங்களை பறிமுதல் செய்து பேராவூரணி சாலையில் ஒதுக்குப்புறத்தில் அதிகாரிகளால் கீழே கொட்டி அழிக்கப்பட்டது.  

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.  இனிவரும் காலங்களில் இது போன்ற ரசாயனம் கலந்த பழங்களை விற்றால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.