தமிழ்நாடு முழுவதும் இன்று பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் உள்ள பட்டுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இன்று மாணவிகள் 10 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுத காத்திருந்த நிலையில் பள்ளியின் வளாகத்திற்குள் சென்ற வெறி பிடித்த நாய் ஒன்று அங்கு பரீட்சைக்கு தயாராகி கொண்டிருந்த மாணவி ஒருவரை கடித்து குதறியுள்ளது. எனவே மாணவிகள் அனைவரும் கத்தி கூச்சலிட்ட நிலையில் அதனை தடுக்க சென்ற பெற்றோர் ஒருவரையும் கடித்து காயப்படுத்தியுள்ளது.
பின்னர் அனைவரும் சேர்ந்து அந்த நாயை பள்ளி வளாகத்தை விட்டு வெளியே துரத்திய போது பெரிய தெரு பகுதியில் நடந்து சென்ற இரண்டு பேரை அந்த வெறி நாய் கண்டித்துள்ளது. அதனைத் தொடர்ந்து அந்த நாய் சாலையிலேயே ஓடி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 10க்கும் மேற்பட்டோரை கடித்து குதறியது. அப்போது அப்பகுதி மக்கள் அந்த நாயை அடித்து துரத்திய நிலையில் மீண்டும் பள்ளியின் வழக்கத்திற்கும் புகுந்த அந்த தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த6 மாணவிகளையும் கடித்தது. இதனால் பள்ளி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே அருகிலிருந்த ஆசிரியர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் துணையுடன் வெறிநாய் கடித்த 6 மாணவிகளையும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். உடனடியாக அங்கு 6 மாணவிகளுக்கும் தடுப்பு ஊசி போடப்பட்டு முதலுதவி செய்து தேர்வு எழுத அனுப்பி வைக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து வெறி நாய் கடித்து படுகாயமடைந்த 14 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பட்டுக்கோட்டை நகராட்சி அதிகாரிகள் பணியாளர்கள் உதவியுடன் அந்த வெறி நாயை வலையை போட்டு அப்படியே லாபகமாக பிடித்தனர்.
வெறி நாய் கடித்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பொதுமக்களை நகராட்சித் தலைவர் சண்முகப்பிரியா செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏக்கள் ஏனாதி பாலசுப்ரமணியன், சேகர் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆறுதல் கூறினர். மேலும் படுகாயமடைந்த மாணவிகளின் பெற்றோர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இதனிடையே தேர்வு எழுதி வரும் மாணவிகளின் நலன் கருதி பட்டுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலேயே அரசு ஆம்புலன்ஸ் மற்றும் நடமாடும் மருத்துவமனை, டாக்டர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உள்ளனர். ஒரே நாளில் கிட்டத்தட்ட 20 க்கு மேற்பட்டோரை வெறிநாய் கடித்து குதறிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.