மாவட்டம்

அன்னை வேளாங்கண்ணி திருத்தல பொன்விழா; பெசன்ட் நகரில் போக்குவரத்து மாற்றம்!

Malaimurasu Seithigal TV

அன்னை வேளாங்கண்ணி திருத்தல பொன்விழா ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையால்  போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தல பொன்விழா ஆண்டுப் பெருவிழா வருகிற 29ம் தேதி கொடியேற்றத்துடன்  தொடங்கவுள்ளது. இந்த திருவிழாவானது செப்டம்பர் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. 29ம் தேதி அன்று கொடிதேர்பவனி, செப்டம்பர் 1ஆம்  அன்று இளைஞர் ஊர்வலம், 02ந் தேதி அன்று தேர்பவனி, தொடர்ந்து மூன்றாம் தேதி ஏழாம் தேதி ஊர்வலம் இருப்பதனை முன்னிட்டு சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையால்  போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. 

திரு.வி.க. பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் வழக்கம் போல் செல்லும். மக்கள் கூட்டம் அதிகமாகவும் வாகனங்கள் செல்ல முடியாதவாறு நெருக்கடியாக இருக்கும் போது 3வது அவன்யூ, & 2வது அவன்யூ நோக்கி அனைத்து உள்வரும் வாகனங்களும் டாக்டர் முத்துலட்சுமி பார்க்கில் (எம்எல் பார்க்) - திரும்பி- LB சாலை- எம்ஜி சாலை வழியாக அனுப்பப்படும்.

எம்ஜி சாலையில் அதிகமாக வாகனங்கள் செல்ல முடியாதவாறு நெருக்கடியாக இருக்கும் போது பெசன்ட் நகர் 1வது பிரதான சாலை- சாஸ்திரி நகர் பேருந்து நிலையம்- 2வது அவன்யூ வழியாக திருப்பி விடப்படும். ஆல்காட் நினைவு மேல்நிலைப்பள்ளி, அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி, பெசன்ட் நகர் 2வது பிரதான சாலை, பெசன்ட் நகர் 4வது அவென்யு, பெசன்ட் நகர் 17வது குறுக்குத் தெரு ஆகிய இடங்களில்  வாகனம் நிறுத்துமிடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.