மாவட்டம்

தங்களை தாங்களே மாய்த்துக்கொண்ட திமுக கவுன்சிலர் குடும்பம்!

Malaimurasu Seithigal TV

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ராசிபுரம் பொம்மி தெரு பகுதியைச் சேர்ந்த திமுக நகர செயலாளரும், நகைக்கடை அதிபருமான அருண் லாலின் மனைவி தேவிப்பிரியா 13-வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர், ஒரு மகள் பெங்களூரில் பணியாற்றி வருகிறார். மற்றொரு மகள் மோனிஷா ராசிபுரம் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். 

இந்நிலையில் வீட்டில் அருண் லாலும்,தேவி பிரியாவும்  தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இதேபோல் இவர்களது 18 வயது மகள் மோனிஷாவும் விஷமருந்தி தற்கொலை செய்துக் கொண்டார்.  இதுகுறித்து தகவலறிந்து சென்ற போலீசார் 3 பேரின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார்  3 பேர் தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.