Admin
மாவட்டம்

“தகாத தொடர்பில் இருந்த அண்ணன் தங்கை” - உண்மை தெரிந்து கண்டித்த கணவர்.. கள்ள காதலர்கள் தனியார் விடுதியில் தற்கொலை!

இதனால் சந்தேகம் அடைந்த விடுதியின் மேலாளர் அறைக்கு சென்று திறந்து பார்த்தபோது இருவரும் மயக்க நிலையில் இருந்துள்ளனர்

Mahalakshmi Somasundaram

சென்னை சைதாப்பேட்டை பகுதியைச்  சேர்ந்தவர்கள் அருண் மற்றும் கிரிஜா இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் அறை ஒன்று எடுத்து தங்கியுள்ளனர். அறைக்குள் சென்ற இருவரும் நீண்ட நேரம் ஆகியும் உணவு அருந்துவதற்கோ அல்லது தண்ணீர் கேட்பதற்கோ போன்ற எந்த தேவைகளையும் கேட்காமல் இருந்துள்ளனர். மேலும்  நீண்ட நேரம் ஆகியும் வெளியில் வராமல் இருந்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த விடுதியின் மேலாளர் அறைக்கு சென்று திறந்து பார்த்தபோது இருவரும் மயக்க நிலையில் இருந்துள்ளனர். 

இதனை அடுத்து மேலாளர் போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில் சப்பிய இடத்திற்கு வந்த போலீசார்  அருண் மற்றும் கிரிஜா இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அருண் மற்றும் கிரிஜா ஆகிய இருவரும் உறவு முறையில் அண்ணன் தங்கை என்பதும் இருவருக்கும் தனித்தனியாக திருமணமாகி  குழந்தைகள் இருப்பதும் தெரிய வந்தது , அருணுக்கு திருமணமாகி அவரது மனைவி கர்ப்பமாக இருக்கும் நிலையில் அருண் பெங்களுருவில் மனைவியுடன் வீடெடுத்து தங்கி வேலை பார்த்து வந்தார். 

இந்த நிலையில் அருண் சென்னைக்கு சென்று வேலை தேட போவதாக  மனைவியிடம் கூறிவிட்டு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தங்கை கிரிஜா வீட்டிற்கு வந்து தங்கி உள்ளார். கிரிஜாவின் கணவர் ஜாவித் இவர்களுக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகிய நிலையில் மனைவியின் அண்ணன் தானே என்பதால் அவரை வீட்டில் தங்க அனுமதித்துள்ளார். கிரிஜா மற்றும் ஜாவித் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக அருண் இவர்கள் வீட்டில் தங்கி இருந்தார்.  கடந்த சில நாட்களுக்கு முன்பு கிரிஜாவின் கணவர் ஜாவித்,  கிரிஜா மற்றும் அருண் ஒன்றாக அறைக்குள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

எனவே “அருளிடம் நீ அண்ணன் என்பதால் தானே உன்னை வீட்டில் தங்க வைத்தேன் இப்படி செய்து விட்டாய்” என்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது பின்னர் ஜாவித் வீட்டிலிருந்து வெளியில் சென்றவுடன்  அருண் ,கிரிஜா மற்றும்  இரண்டு குழந்தைகளுடன் வேறு பகுதிக்கு செல்ல முடிவு செய்து அங்கிருந்து கிளம்பிய நிலையில் ஜாவித் கிரிஜாவை தொடர்புகொண்டு “ஏன் பிள்ளைகளை அழைத்து சென்றாய் அவளவுதான், எனது பிள்ளைகளை என்னிடம் விடவில்லை என்றால் போலீசில் புகாரளித்து விடுவேன்” என்று தெரிவித்துள்ளார். உடனே கிரிஜா பிள்ளைகளை வீட்டிற்கு அழைத்து வந்து குழந்தைகள் மூலமாக செல்போனில் அழைத்து வீட்டிற்கு வந்து விட்டோம் என்று ஜாவித்திடம்  தெரிவித்துள்ளார்.  

இதனால் ஜாவீத் புகார் ஏதும் அளிக்காமல் வீடு திரும்பியதாகவும் பிள்ளைகளை மட்டும் வீட்டில் விட்டுவிட்டு இருவரும் விடுதிக்கு வந்து அண்ணன் தங்கை கள்ளக்காதல் விவகாரம் வெளியில் தெரிந்தால் பெரிய அவமானம் என்பதால் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தனியார் தங்கும் விடுதியில் கள்ளக்காதலர்கள் தற்கொலை முயற்சி ஈடுபட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.