“திருநங்கையை காதலித்த இளைஞர்” - திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் அரிவாள் வெட்டு.. முன்னாள் காதலனுக்கு ஸ்கெட்ச் போட்ட காதலி!

திடீரென அஜித் குமார் தனது வீட்டில் நமது காதலை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே தான் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக
rita and vishnu
rita and vishnu
Published on
Updated on
2 min read

ராமநாதபுரம் மாவட்ட சேர்ந்தவர் 30 வயதுடைய அஜித்குமார். பட்டதாரியான இவர் மதுரவாயல் ஜனனி நகர் பகுதியில் வீடு எடுத்து தங்கி வானகரத்தில் உள்ள தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பணி முடிந்து வானகரம் சுங்கச்சாவடி வழியாக வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தபோது அஜித் குமாரை வழி மறித்த மர்ம நபர்கள் அஜித்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.

இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அஜித் குமாரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து. போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

Admin

விசாரணையில் அஜித் குமார் ரீட்டா என்ற திருநங்கை ஒருவருடன் பழகி வந்ததாகவும், அவரை அஜித் குமார் திருமணம் செய்து கொள்வதாக கூறி பல இடங்களுக்கு ஒன்றாக சென்று வந்துள்ளனர். திடீரென அஜித் குமார் தனது வீட்டில் நமது காதலை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே தான் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி பிரிந்ததாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் ரீட்டாவும் விஷ்ணு என்ற வேறொருவரை காதலித்து வந்துள்ளார். அப்போது தன்னை வேண்டாம் என சொன்ன முன்னாள் காதலன் அஜித் குமாரை பழிவாங்க வேண்டும் என்று நினைத்துள்ளார். இதனால் ரீட்டா தனது தற்போதைய காதலனான விஷ்ணுவுடன் சேர்ந்து அஜித் குமாரை தீர்த்து கட்ட முடிவு செய்து விஷ்ணுவின் நண்பர்களையும் கூட்டு சேர்த்து கொண்டு வேலையை முடித்துவிட்டு வானகரம் சுங்கச்சாவடி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த அஜித்குமாரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

Admin

ரத்தவெள்ளத்தில் மிதந்த அஜித்குமாரை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை ஈடுபட்டு வந்த நிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட திருநங்கை ரீட்டா உட்பட தற்போதைய காதலன் மாங்காடு பகுதியை சேர்ந்த விஷ்ணு(25) அவரது நண்பர்கள் மலையம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார் 26, கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த சூர்யா 24, எருக்கஞ்சேரி பகுதியை சேர்ந்த பிரசாந்த் 28, கொளத்தூர் பகுதியை சேர்ந்த பிரவீன் 23, பாடி பகுதியைச் சேர்ந்த மணி 21, என ஏழு பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதாக திருநங்கை தனது முன்னாள் காதலனை இந்நாள் காதலனை வைத்து வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அஜித் குமார் கொலை செய்யப்பட்டதற்கு இதுதான் உண்மையான காரணமா? இல்லை வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com