hosur hot oil news in tamil hosur hot oil news in tamil
மாவட்டம்

“மாணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய ஸ்வீட் கடைக்காரர்” - காதல் தகராறில் காயத்துடன் தவிக்கும் 8 ஆம் வகுப்பு சிறுவன்!

சிறுவன் யாருக்கும் தெரியாமல் அவரது நண்பர் வீட்டிற்கு அழைத்து சென்றதாக சொல்லப்படுகிறது...

Mahalakshmi Somasundaram

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுவன். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் அதே பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது நட்பானது காதலாக மாறி இருவரும் காதலித்து வந்திருக்கின்றனர். இந்நிலையில் அந்த சிறுமியை கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து சிறுவன் யாருக்கும் தெரியாமல் அவரது நண்பர் வீட்டிற்கு அழைத்து சென்றதாக சொல்லப்படுகிறது.

மகளை காணவில்லை என பதற்றமடைந்த பெற்றோர் தனது மகளை கண்டுபிடித்து தருமாறு ஓசூர் அனைத்து மகளிர் போலீசாரிடம் புகாரளித்துள்ளனர். புகாரை ஏற்று வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு சிறுவனிடம் சிறுமியை மீட்டதுடன் அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைந்திருக்கின்றனர். அந்த வழக்கில் இருந்து ஜாமீனில் வெளியில் வந்த சிறுவன் மீண்டும் சிறுமியுடன் பேசி வந்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர் செல்லத்துரை உள்ளிட்ட இரண்டு பேர் அந்த சிறுவனை அழைத்து “இனிமேல் எங்க பொண்ணு கூட பேசுற வேலை வேணாம் அப்படி நீ பேசுறது தெரிஞ்சா கொன்னு போட்ருவோம்” என மிரட்டி தாக்கியுள்ளனர். இதுகுறித்து அறிந்த சிறுவனின் தம்பியான ஓசூர் அரசு பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவன், செல்லதுரை நடத்தி வரும் சாலை ஓர ஸ்வீட் கடைக்கு சென்று தனது அண்ணனை எப்படி அடிக்கலாம் என செல்லத்துரையிடம் கேள்வி கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த செல்லத்துரை அவரது கடையில் ஸ்வீட் போடா வைத்திருந்த கொதிக்கும் எண்ணெயை எடுத்து மாணவனின் மீது ஊற்றியுள்ளார். இதில் மாணவனுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது, இதனை பார்த்த அப்பகுதி மக்கள் மாணவனை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஓசூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு செல்லத்துரை உள்ளிட்ட இரண்டு பேரை கைது செய்தனர். தகராறின் போது பள்ளி மாணவன் மீது ஸ்வீட் கடைக்காரர் கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்