கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம், அருகே அரியாந்தக்கா கிராமத்தில் உள்ள பழைய மேல்நிலை நீர் தேக்க தொட்டி மிகவும் சேதமடைந்து, இடிந்து விழும் நிலையில் இருந்ததால் நீர் தேக்க தொட்டி ஊராட்சியின் சார்பில் இடித்து அகற்றப்பட்டது, இந்த நிலையில் பொது மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்கு முறையான எந்த ஏற்பாடுகள் செய்யபடவில்லை.
எனவே, கடந்த 30 நாட்களுக்கு மேலாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர், இதனால் பொதுமக்கள் நீண்ட தூரம் சென்று, வயல்வெளியில் உள்ள கிணறுகள் மற்றும் மின் மோட்டாரில் குடிநீர் எடுத்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது, இதனால் பொதுமக்கள் நலன் கருதி அரியாந்தக்கா கிராமத்தில் முறையான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்