Admin
மாவட்டம்

“குற்றவாளியுடன் சேர்ந்து பெண்ணை கற்பழித்த காவலர்” - கோவிலில் பிச்சை எடுத்து நாடகம்.. பிளானுடன் வரவழைக்கப்பட்ட ஊடகங்கள்!

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியில் இருந்த சக காவலர்கள் பிரபாகரனை சமாதானம் செய்து அழைத்து சென்றனர்....

Mahalakshmi Somasundaram

கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தவர் 35 வயதுடைய பிரபாகரன். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ள நிலையில் கடந்த (செப் 19) தேதி இவர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது தொழிற்பேட்டை பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் பேசி கொண்டிருந்தார். அவர்களிடம் சென்ற காவலர் பிரபாகரன் விசாரிப்பது போல அந்த வாலிபரிடம் பேசி அவரிடம் இருந்த எட்டாயிரம் பணத்தை பறித்திருக்கிறார்.

பின்னர் அந்த வாலிபரை மிரட்டி அப்பகுதியில் இருந்து அனுப்பி வைத்துவிட்டு அந்த இளம் பெண்ணிடம் காவலர் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டிருக்கிறார். மேலும் காவலருடன் இருந்த போக்சோ கைதியான 35 வயதுடைய கௌதமன் என்பவரும் பெண்ணிடம் அத்துமீறியுள்ளார். இவர்களிடமிருந்து தப்பித்த இளம்பெண் தனது நண்பரின் உதவியுடன் பசுபதிபாளையம் காவல் நிலையத்திற்கு சென்று காவலர் பசுபதி மற்றும் கௌதமன் மீது புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் (செப் 20) ஆம் தேதி பணிக்கு வந்த காவலர் பிரபாகரனை கைது செய்த பசுபதிபாளையம் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தற்போது இந்த வழக்கில் இருந்து ஜாமீனில் வெளியில் வந்த பிரபாகரன் மீண்டும் தன்னை பணியில் சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டு வந்துள்ளார். அதற்கு உயர் அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து கண்டித்து அனுப்பி வைத்தனர் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் பிரபாகரன் தனது எட்டு வயது வயது மகனுடன் கரூர் வெண்ணெய் மலை முருகன் கோயிலுக்கு வந்து கோவில் அருகே உள்ள மரத்தடியில் அமர்ந்து யாசகம் எடுக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியில் இருந்த சக காவலர்கள் பிரபாகரனை சமாதானம் செய்து அழைத்து சென்றனர்.

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பலரும் காவலர் பிரபாகரனுக்கு ஆதரவு தெரிவித்து வந்த நிலையில் இதையெல்லாம் காவலரை பிரபாகரன் திட்டமிட்டு செய்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவிலுக்கு வருவதற்கு முன்பாகவே பத்திரிகையாளர்களுக்கு தகவல் அளித்து அவர்களை வரவழைத்த பிரபாகரன் பிச்சை எடுப்பது போல நடித்து தன்னை மீண்டும் பணியில் அமர்த்துமாறு உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்.

இது குறித்து பிராபகரன் செய்தியாளர்களிடம் பேசும் போது “என் பெயர் பிரபாகரன். நான் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறேன். என் மேல் போடப்பட்ட ஒரு பொய் வழக்கு காரணமாக சஸ்பண்ட் செய்யப்பட்டு 2 அரை மாத காலமாக வேலையும் வருமானமும் இல்லாமல் குடும்பத்தை காப்பாற்ற முடியாமல் தவித்து வருகிறேன். என் குடும்பத்தை காப்பாற்ற வேறு வழியின்றி கோவில் முன்பு யாசகம் எடுக்க வந்தேன் என தெரிவித்தார்” காவலர் பிரபாகரன் மீது போடப்பட்ட வழக்கு ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்ட நிலையில் தன மீது குற்றமில்லை என கட்டிக்கொண்டு மீண்டும் பணியில் சேர பிரபாகரன் இவ்வாறு செய்வதாக சகா காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.