
கரூர் மாவட்டம், கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தொழிற்பேட்டை பகுதியில் கடந்த 19ம் தேதி இரவு அதே பகுதியை சார்ந்த திருமணமான இளம்பெண் ஒருவர் தான் புதிதாக வாங்கிய மின்சார இருசக்கர வாகனத்தை தனது வீட்டிற்கு அருகில் உள்ள பகுதியில் ஓட்டி பழகிக் கொண்டிருந்ததாகவும், அப்போது, அங்கு வந்த தன் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
அப்போது பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றும் வெங்கமேடு பகுதியை சேர்ந்த 35 வயதுடைய பிரபாகரன் ( என்பவர் இரவு ரோந்து பணிக்கு சென்றுள்ளார். அவருடன் பசுபதிபாளையம் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய கெளதமன் என்பவரும் சென்றுள்ளார். கௌதமன் போக்சோ குற்றவாளி என கூறப்படுகிறது.
இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்றபோது அங்கு சாலையில் நின்று தனியாக பேசிக்கொண்டிருந்த இருவரிடமும் சென்று “யார் நீங்கள் இந்தநேரத்தில் இங்கு என்ன செய்கிறீர்கள்” என விசாரித்துள்ளனர். இந்நிலையில் இருவரு பதில் அளித்த பின்னர் காவலர் இருவரையும் தாக்கியதாக சொல்லப்படுகிறது. மேலும் இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து பெண்ணின் ஆண் நண்பரிடமிருந்து எட்டாயிரம் ரூபாய் பணத்தையும் பறித்துள்ளனர். இதனால் பயந்து காவலரிடமிருந்து தப்பிய இளம் பெண் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், பணிக்கு வந்த காவலர் பிரபாகரனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தப்பியோடிய கெளதமனை போலீசார் தேடி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.