மாவட்டம்

“காசு குடுத்தா என்ன சொன்னாலும் பண்ணுவியா” - விஜய்க்கு எதிராக போஸ்டர் ஒட்டிய வாலிபர்.. வீடியோ வெளியாகி வைரலான நிலையில் தற்கொலை!

தமிழக வெற்றிக் கழக கீழையூர் ஒன்றிய செயலாளர் திவாகர் உள்ளிட்ட தவெக நிர்வாகிகளை பிடிக்க...

Mahalakshmi Somasundaram

கரூரில் நடந்த தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய்யை கைது செய்ய வேண்டும் என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்து உள்ள பிரதாபராமபுரம் கிராம முக்கிய சுவர்களில் கரூர் சம்பவத்திற்கு காரணமான தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை கைது செய்ய வேண்டும் என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது.

அப்போது அங்கு வந்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் சிலர் சுவரொட்டி ஒட்டிய நபரை வீடியோ எடுத்து “யார் ஒட்டசொன்னது” என கேள்வி எழுப்பி தகராறில் ஈடுபட்டனர் சொல்லப்படுகிறது.
சுவரொட்டியை ஒட்டிய பரத்ராஜ் “நான் ஒட்டவில்லை நான் சம்பளத்திற்கு மட்டுமே வேலை செய்கிறேன் பணம் கொடுத்து ஒட்ட சொன்னார்கள் ஒட்டினேன்” என கூறியுள்ளனர் இருப்பினும் விடாத தவெக நிர்வாகிகள் “காசு கொடுத்த என்ன சொன்னாலும் பண்ணுவியா” என கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டியதாக சொல்லப்படுகிறது. அதனை வீடியோ எடுத்து அந்த வீடியோவையும் அவர்கள் சமூக வலைதளங்களில் பரப்பியதாக தெரியவந்துள்ளது. 

இதனால் அதனை தொடர்ந்து சுவரொட்டி ஒட்டிய வேளாங்கண்ணி பகுதியை சேர்ந்த பரத்ராஜை பலர் சமூகவலைத்தளங்களில் தவறாக பேசியதாக கூறப்படுகிறது . எனவே மனமுடைந்த தன்னை மிரட்டியதாக தவெக நிர்வாகிகள் மீது கீழையூர் காவல் நிலையத்தில் 29 ஆம் தேதி இரவு புகார் அளித்திருந்தார். புகைரளித்து பல நாட்களான நிலையில் போலீசார் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் பரத்ராஜ் வேளாங்கண்ணி பகுதியில் உள்ள கீற்றுக் கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார்.

பரத்ராஜ் தற்கொலை செய்துகொண்ட தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேளாங்கண்ணி போலீசார் அவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் பரத்ராஜை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி விட்ட கீழையூர் தெற்கு ஒன்றிய செயலாளர் திவாகர் உட்பட அக்கட்சியினர் 4 பேர் மீது கீழையூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த இருபத்தி ஒன்பதாம் தேதி தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மீது பரத்ராஜ் புகார் அளித்த நிலையில் கீழையூர் போலீசார் அலட்சியம் காட்டிய நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் தலைமறைவாக உள்ள தமிழக வெற்றிக் கழக கீழையூர் ஒன்றிய செயலாளர் திவாகர் உள்ளிட்ட தவெக நிர்வாகிகளை பிடிக்க நாகை டிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த பரத் ராஜ் திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினராக செயல்படுவதும், போஸ்டர் ஒட்டும் தொழில் செய்து வருகிறார் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.