நெல்லை மாவட்டம், பேட்டை செக்கடி பகுதியில் உள்ள அனவரத விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் பட்சிராஜா. இவரது மகள் 19 வயதுடைய சிவமதி இவர் நெல்லையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இயற்பியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். பட்சிராஜன், அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சிவமதிக்கும், பேட்டை கடசர் தெருவை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் ஆனந்த கிருஷ்ணன் என்பவரும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது காதலாக மாறியுள்ளது.
தொடர்ந்து இருவரும் காதலித்து வந்த நிலையில் இவர்களது காதலை அறிந்து சிவமதியின் பெற்றோர்கள் ஆனந்த் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். இருப்பினும் சிவமதி தனது காதலில் உறுதியாக இருந்த நிலையில் இரு வீட்டு பெற்றோரும் பேசி திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருக்கின்றனர். அதன்படி வருகிற (பிப் 09) ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடக்க இருந்த நிலையில் நேற்று முன்தினம் இளம் பெண் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மகள் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் இளம்பெண்ணை மீட்டு பழைய பேட்டை கண்டியபெரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்த போலீசார் தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்ட நிலையில் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த பின்னரும் தொடர்ந்து காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவமதியை கண்டித்ததாக சொல்லப்படுகிறது இதனால் மனமுடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறியுள்ளனர். இந்நிலையில் காதலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை அறிந்த ஆனந்த் சிவமதியை அவரது பெற்றோர்கள் தான் “ஆணவ கொலை செய்து விட்டார்கள்” என காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார்.
இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் சிவமதியின் உயிரிழப்பு கொலையா? அல்லது தற்கொலையா? என்பது பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகே தெரியவரும் என் தெரிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து இன்று சிவமதியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் தற்கொலை செய்துகொண்டதாக முடிவுகள் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் சட்டப்படி உடலை பெற்றோரிடம் ஒப்படைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்