ragging 
மாவட்டம்

"உருவ கேலியால் மனமுடைந்த மாணவன்" - பெற்ற தாயின் கண் முன்னே.. எந்த தாய்க்குமே இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது!

பள்ளியில் 12 ஆம் வகுப்பு படுத்து வந்த கிஷோர் என்ற மாணவனை உடன் படிக்கும் மாணவர்கள், குண்டாகவும்

Anbarasan

சென்னை சேத்துப்பட்டு, பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியான "மகரிஷி வித்யா மந்தீர்" பள்ளியில் படிக்கும் 12 ஆம் வகுப்பு மாணவன்,தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மகரிஷி வித்யா மந்தீர் பள்ளியில்12 ஆம் வகுப்பு படுத்து வந்த கிஷோர் என்ற மாணவனை உடன் படிக்கும் மாணவர்கள், குண்டாகவும் கருப்பாகவும் இருப்பதாக சொல்லி உருவ கேலி செய்துவந்துள்ளனர், இது குறித்து கிஷோர், கடந்த இரண்டு மாதங்களாக அவனது வகுப்பாசிரியரிடமும், பள்ளி நிர்வாகத்திடமும் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் புகாருக்கான எந்த நடவடிக்கையும் நிர்வாகத்தால் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று பள்ளிக்கு சென்ற கிஷோரை, அவனுடன் படிக்கும் மாணவர்கள் மீண்டும் கடுமையாக கேலி செய்திருக்கின்றனர், அது மட்டுமல்லாமல் கழிவறையை சுத்தம் செய்ய வைத்துள்ளனர், இதனால் மனமுடைந்த கிஷோர், மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்ற நிலையில், இதுகுறித்து தனது அம்மாவிடம் சொல்லி தந்தைக்கு கால் செய்ய சொல்லியிருக்கிறார்.

அவர்கள் கால் செய்யும் அதே நேரத்தில், கிஷோர் தனது அம்மா கண் முன்னரே நான்காவது மடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் கிஷோரின் பெற்றோர்கள் புகார் கொடுத்த நிலையில், காவல் துறை கிஷோரின் வகுப்பாசிரியரிடமும், பள்ளி நிர்வாகத்திடமும் விசாரணை மேற்கொண்டுவருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்