சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த, 5 பேர் திருச்சி சமயபுரம் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு புதுக்கோட்டை வழியாக திருச்செந்தூர் கோயிலுக்கு செல்வதற்காக, திருச்சி காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை அடுத்த நமணசமுத்திரம் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது,முன்னாள் சென்ற ஒரு காரை முந்தி செல்ல முயற்சி செய்துள்ளனர்.
அப்போது காரும் எதிரே வந்த இருசக்கர வாகனமும் மோதி விபத்து ஏற்பட்டது, இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த சேலம் மாவட்டம், தாலுக்காப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (38) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற திருமயம் எஏனப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி (65) என்பவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும், இந்த விபத்தில் கார் மற்றும் இரு சக்கர வாகனத்தில் சென்ற 5 பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விபத்து குறித்து நமணசமுத்திரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்