காலத்தால் அழியாத எத்தனையோ காதல்களை நாம பார்த்திருப்போம், கேட்டிருப்போம், உதாரணமா, லைலா மஜூனு, ஷாஜகான் மும்தாஜ் போன்ற காவிய காதலும் சரி, இப்ப திரையில் பிரபலமான சீதா ராமம், கீதா கோவிந்தம் போன்ற சினிமா காதலா இருந்தாலும் சரி உண்மையான காதலோடு இருந்தாங்க.
இன்றைய காதலர்கள் இன்ஸ்டா பாத்தோமா லவ் பண்ணோமா, ரீல்ஸ் ஷேர் பண்ணோமா, ஸ்டோரில டேக் பண்ணோமானு ஒரு புது காதலை பண்ணிட்டு இருக்காங்க. ஆனால் இந்த காதல் கடைசி வரைக்கும் நிலைக்குமாங்கிறதுதான் கேள்வி குறியா இருக்கு.
இப்படி இன்ஸ்டால தொடங்கிய காதல் கதையோட, ஒரு விபரீத முடிவு தான் இந்த கல்லூரி மாணவர்கள் பேருந்து நிலையத்தில் பண்ண இந்த சம்பவம்.சேலம் அருகே மின்னாம்பள்ளி பகுதியைச் சேர்ந்த சூர்யா கோரிமேடு பகுதியில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு உயிரியல் படித்து வருகிறார். இவருக்கு ஆட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த மோகன பிரியன் என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகியுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் பேசி இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் இவர்களுக்குள் முரண் ஏற்பட்டு காதல் பிரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இருவரும் இன்று காலை பழைய பேருந்து நிலையத்தில் சந்தித்து பேசி உள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் மோகன பிரியன் திடீரென கத்தியை எடுத்து சூர்யாவை குத்தி விட்டு தனது கை மற்றும் கழுத்தில் கத்தியால் கிழித்து கொண்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பேருந்து நிலையம் பகுதியில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி விட்டு இளைஞர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து சேலம் டவுன் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்