மாவட்டம்

இனிமேல் இது போல் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் - அதிகாரிகளுக்கு வேண்டுகோள்...

ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஒன்றியக்குழுக கூட்டத்தில் அதிகாரிகள் மீது ஒன்றிய குழு பெருந்தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

விழுப்புரம் | திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய குழு பெருந்தலைவர் சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர் .

அப்பொழுது பேசிய ஒன்றிய குழு பெருந்தலைவர் சொக்கலிங்கம், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் எனது பார்வைக்கு வராமல் பல கோப்புகள் நேரடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் செல்வதால் சில தவறுகள் நடக்கின்றது என்று கூறினார்.

மேலும் அவர் பேசும்போது, அதிகாரிகளால் கிராமப்புறங்களில் நடத்தப்படுகின்ற ஆய்வு குறித்த எந்த விதமான தகவல்களையும் என்னிடத்தில் தெரிவிப்பதில்லை என்றும் , ஒரே பணிக்காக, ஒரே தேதியில், இரண்டு முறை அல்லது மூன்று முறை  அரசு பணம் பயன்படுத்தப்படுவதாகவும் கூறினார்.

பின், இதற்கு முழு காரணம் துறை சார்ந்த அதிகாரிகள் மட்டுமே என்றும், இதுபோல் தவறுகள் நடக்கும் நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் பாதிக்கப்படுவார் என்று பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்த ஒன்றிய குழு பெருந்தலைவர், இனிமேல் இது போன்ற தவறுகள் நடைபெறாமல் அதிகாரிகள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

அப்பொழுது அவையில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.