Honey Trap... இதை சுருக்கமாகச் சொன்னால், அழகான நபர்களைப் பயன்படுத்தி எதிரியை மயக்கி, அவரிடம் இருந்து ரகசிய தகவல்களைத் திருடுவது அல்லது அவரை சிக்க வைப்பது. இது ஒரு புத்திசாலித்தனமான, ஆனால் ஆபத்தான தந்திரம்! உளவு வேலை, அரசியல் சதி, பழிவாங்குதல், அல்லது பணம் பறிப்பது போன்ற பல காரணங்களுக்காக இதைப் பயன்படுத்துவார்கள்.
இது போன்ற ஒரு ஹனி டிராப் சம்பவத்தில் தான், விஷ்ணு சிக்கிக்கொண்டதாக அவர் சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார், இந்த புகாரில் தன்னை பெண்ணிடம் பழக வைத்து பார்ட்டி என்ற பெயரில் வரவழைத்து தாக்கி மிரட்டி ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டதாக தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய விஷ்ணு தனக்கு நன்கு தெரிந்த மலேசிய நண்பர் நரேஷின் மூலமாக அறிமுகமான சந்தோஷ்,காயத்ரி,ரகுநாத் மற்றும் அவர்களது நண்பர்கள் உள்ளிட்ட சிலர் சமூக ஊடகங்களில் இன்புளுயன்சர் என்ற காரணத்தினால் தன்னுடன் நெருங்கி பழகி வந்தார்கள் என தெரிவித்தார்.
மேலும் அவர்கள் நிகழ்ச்சிகளுக்கு தன்னை அழைப்பது வழக்கம்.அவ்வாறு கடந்த 15 ஆம் தேதி அன்று சந்தோஷ் உள்ளிட்டோர் தங்கள் தி.நகர் வீட்டிற்கு என்னை விருந்திற்கு அழைத்தனர். அதன் பேரில் நண்பர்கள் தானே என எண்ணி அவர்கள் அழைத்த இடத்திற்கு நம்பி சென்றேன்.
முதலில் என்னிடம் நல்ல நட்புடன் பழகினார்கள். பிறகு என்னை மது அருந்தச் சொல்லி கட்டாயப்படுத்தினார்கள். அவர்கள் அனைவரும் குடிக்கத் தொடங்கிய ஒரு மணி நேரத்தில் அவர்களிடம் மாற்றம் ஏற்பட்டு என்னை திடீரென்று ரகுநாத் தலையின் பின்பக்கம் பலமாக தாக்கினார்.
“Honey Trap” - முழுமையாக தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
என்ன நடக்கிறது என்று புரியாமல் “ஏன் என்னை அடிக்கிறீர்கள்?என்று கேட்டதற்கு, சந்தோஷின் உறவினர் பெண்ணிடம் நான் தவறுதலாக நடந்ததாக குற்றம் சாட்டினார்கள்.
நான் அதற்கு பதில் கூறுவதற்கு முன் சந்தோஷின் மனைவி என்னை முட்டி போட சொன்னார். அதை தொடர்ந்து சந்தோஷின் நண்பர்கள் தன்னை அடித்து எனது செல்போனை ரகுநாத்தும் , சந்தோஷும் பிடுங்கினார்கள். என்னை அடித்து என்னுடைய Password-ஐ கேட்டார் ஏன் கேட்கிறீர்கள் என்று கேட்டதற்கு ரகுநாத் அவரது நண்பர்களுடன் சேர்ந்துக் கொண்டு என்னை கடுமையாக முதுகிலும் கையிலும் தாக்கினார்கள்.
என்னை விட்டுவிடுங்கள் என்று அழுது புலம்பினேன் அவர்கள் அடிப்பதை நிறுத்தவில்லை ரகுநாத் என்னை காலால் உதைத்து கீழே தள்ளி விட்டார். அதன் பிறகு நான் mobile password-ஐ கொடுத்து விட்டேன். நான் சந்தோஷின் சகோதரியிடம் தவறாக பேசினேன் என்று குற்றம் சாட்டினார்கள். அவ்வாறு எதுவும் நடக்கவில்லை அந்த பெண் மாடலிங்க் பீல்டில் முயற்சி செய்ததால் நட்புடன் பழகி வந்தேன்.
ஒரு நண்பனாக சாதாரணமாக குறுஞ்செய்திகள் அனுப்பினேன் என்று கூறியவுடன் தினேஷ் என்னை அடித்து துன்புறுத்தி உன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டினார்.மேலும் சந்தோஷ் மற்றும் காயத்ரி என்னை மிரட்டி எங்களுக்கு தெரிந்த ரவுடி வருகிறார்கள் என்றும், அவர்களிடம் உன்ன ஒப்படைத்து விடுவோம் என்றும் மிரட்டி, என்னை திட்டிக் கொண்டு சில பேரிடம் தொலைபேசியில் பேசிவிட்டு தினேஷ் மற்றும் மரியன் என்பவர்களிடம் என்னை வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் போடா சொன்னார்கள்.
மேலும் “நான் சொல்வது போல் வீடியோவில் பேசினால் உன்னை ஒன்றும் செய்யாமல் விட்டு விடுவோம்” என்று மிரட்டி, அதன் பிறகு சந்தோஷ், தினேஷ், ரகுநாத், மரியன் மற்றும் பெயர் தெரியாத இரு நபர்களும் சேர்ந்துக் கொண்டு என்னை வயிறு, வாய், கழுத்து மற்றும் தலையில் தாக்கினார்கள்.
தன்னை பார்ட்டி என்ற பெயரில் வரவழைத்தது திட்டமிட்ட செயல் என்று புரிந்துக் கொண்டேன்.அவர்கள் என்னை மிரட்டி “ என்ன கேள்வி கேட்கிறோமோ அதற்கு நாங்கள் சொல்வது போல் பதில் சொல். அவ்வாறு பதில் சொல்லவில்லை என்றால் உன்னை கொலை செய்து விடுவோம்” என்று மிரட்டினார்கள். “நீ அமைதியாக இருந்தால் நான் உனது mobile Phone-ஐ கொடுத்து விடுவேன்” என்றும் கூறினார்கள். காண்டம் அவர்கள் வாங்கி வைத்திருந்ததை எனது பையில் வைத்து நான் வைத்து இருந்தது போல் வீடியோவாக சித்தரித்து நான் கெஞ்சிக் கேட்டுக்கொண்டும் என்னை விடாமல் அனைத்து வீடியோவையும் வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டினார்கள். “நீ அமைதியாக இருந்தால் எந்த வீடியோவையும்” வலைதளங்களில் பதிவு விட மாட்டோம் என கூறினார்கள்.
“ஒரு கோடிகொடுத்தால் உன்னை விட்டு விடுகிறோம்” என ரகுநாத்தும் அவர்களது நண்பர்களும் மிரட்டினார்கள். “நான் அதற்கு தற்பொழுது பணம் இல்லை என்றும் எனது மனைவியிடமோ, தாயிடமோ அல்லது உறவினர்களிடமோ பணத்தை கடனாக பெற்றுக்கொடுத்து விடுகிறேன் என்றும் உயிர் பிழைத்தால் போதும் என்றும் நினைத்து வந்துவிட்டேன்” இதற்கிடையில் என்னை எடுத்த வீடியோவை திருத்தம் செய்து பதிவேற்றம் செய்வதற்கு தயாராக உள்ளதாக ரகுநாத் என்னை மிரட்டினார். என்னால் பணம் கொடுக்க முடியவில்லை என்று தெரிந்ததும், என் மொபைல் போனிலிருந்து இன்ஸ்டாகிராமில் என் கணக்கை பெயர் மற்றும் கடவுச்சொல் மாற்றம் செய்து அந்த வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளார்கள். இது போன்று பலரிடம் அந்த கும்பல் செய்திருக்கலாம் என தான் சந்தேகிப்பதாகவும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்துள்ளாதாகவும் விஷ்ணு கூறியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்