மாவட்டம்

கொளுத்தும் வெயிலில் பள்ளிக்கு நடந்து செல்லும் மாணவர்கள்...

ரிஷிவந்தியம் அருகே பேருந்து வசதி இல்லாததால் கொளுத்தும் வெயிலில் மாணவர்கள் நடந்தே பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

Malaimurasu Seithigal TV

கள்ளக்குறிச்சி | ரிஷிவந்தியம் அருகே உள்ள வாணாபுரம்,ஏந்தல், மையனூர், கடம்பூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமத்தைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பகண்டை கூட்டுச்சாலை பேருந்து நிலையத்திலிருந்து தினமும் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

ஆனால் போதிய பேருந்து வசதி இல்லாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.

மேலும் சென்னை, விழுப்புரம், திருக்கோவிலூர் ஆகிய பகுதிகளிலிருந்து சங்கராபுரம் செல்லும் அரசு பேருந்துகளில் பள்ளி மாணவர்களுக்கு பயண கட்டணம் கேட்பதால் கட்டணம் செலுத்த முடியாமல் சுமார் நான்கு கிலோமீட்டர் தூரம் கொளுத்தும் வெயிலில் தினசரி நடந்தே செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.