மாவட்டம்

“குழந்தைகள் கண்முன்னே நசுங்கிய தாயின் உடல்” - மனைவியின் உயிரை பறித்த கணவனின் செயல்.. ஆசையாக வாங்கிய கார் எமனாக மாறியது எப்படி?

சிறுக சிறுக பணத்தை சேமித்து வைத்த தம்பதியினர் கடந்த ஒரு மாதத்திற்கு முன் பழைய Swift கார்...

Mahalakshmi Somasundaram

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி கோனாம்பேடு, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் 38 வயதுடைய ராஜா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 34 வயதுடைய இந்துமதி என்பவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில் ராஜா அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதால் குடும்பத்துடன் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர்.

கார் வாங்க வேண்டும் என சிறுக சிறுக பணத்தை சேமித்து வைத்த தம்பதியினர் கடந்த ஒரு மாதத்திற்கு முன் பழைய Swift கார் ஒன்றை வாங்கி உள்ளனர். இருவருக்கும் கார் ஓட்ட தெரியாது என்ற காரணத்தால் ஒரு ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து இருவரையும் கார் ஓட்ட பழகி வந்துள்ளனர். மேலும் ஓட்டுநர் உரிமத்தை வாங்கி வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. நேற்று ராஜாவுக்கு குழந்தைகளுக்கும் விடுமுறை என்பதால் குடும்பத்துடன் அருகில் உள்ள கோவிலுக்கு செல்ல முடிவு செய்திருக்கின்றன.

இதனை தொடர்ந்து நேற்று காலை குடும்பத்துடன் காரில் கோவிலுக்கு சென்று அங்கு வழிப்பாடு முடித்துக்கொண்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் உள்ள போர்ட்டிகோவில் காரை ஏற்றும் மனைவி இந்துமதி கீழே இறங்கு அவரது கணவருக்கு சைடு பார்த்துள்ளார். அப்போது காரை வேகமாக ஏற்றியதாக கூறப்படுகிறது. எனவே காரை ரிவர்ஸ் பார்க்க வலது பக்கத்தில் நின்றிருந்த இந்துமதி மீது, வேகமாக மோதியதில் அவர் காருக்கும் சுவற்றுக்கும் நடுவே சிக்கிக் கொண்டார்.

இதில் நெஞ்சு மற்றும் வயிறு பகுதியில் உள் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் உடல் நசுங்கி மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்த ராஜா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இந்துமதியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். ஆசை ஆசையாக வாங்கிய காரே பெண்ணின் உயிருக்கு எமனான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.