திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த விஷமங்கலம், ஏரிக்கோடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் இந்த தம்பதிக்கு 20 வருடங்களாக குழந்தை பிறக்காமல் இருந்துள்ளது. பின்னர் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு 2008 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்ததது.
தற்போது 17 வயதாகும் ராஜேந்திரனின் மகன் ஹரிஹரன் அருகில் உள்ள அரசு பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிக்கூடத்தில் நன்றாக படிக்கும் ஹரிஹரன் மற்ற நேரங்களில் தந்தைக்கு உதவியாக அவருடன் விவசாயம் பார்த்து வந்தார். இந்நிலையில் சனிக்கிழமை மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த ஹரிஹரன் அவரது தந்தைக்கு உதவியாக விவசாயம் பார்த்துள்ளார்.
பின்னர் பள்ளியில் கொடுத்த சில எழுதும் வேலைகளை செய்து விட்டு வழக்கத்திற்கு மாறாக அவரது பெற்றோரிடம் “நான் தனியாக அறையில் தூங்கிக் கொள்கிறேன்” என கூறியுள்ளார். எனவே பெற்றோர்களும் எதுவும் கூறாமல் இரவு உணவு அருந்திவிட்டு உறங்கியுள்ளனர். அப்போது பாதி இரவில் எழுந்த ஹரிஹரன் தூங்க போகும் முன்பு வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டேன் என பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் பதற்றமடைந்த பெற்றோர்கள் எதற்காக அவ்வாறு செய்தாய் என கேட்டபோது ஹரிஹரன் “நான் காட்டுப்பக்கம் சென்றுவிட்டு வந்து உறங்கிய போது வீட்டிற்கு வெளியில் இருவர் நின்றுகொண்டு என்னை வா வா என அழைத்தனர் பின்னர் எதுவும் நினைவில்லாமல் பிணையில் எடுத்து குடித்தேன்” என தெரிவித்தார். உடனடியாக ஹரிஹரனை மீட்ட அவரது பெற்றோர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மேலும் அங்கு முதல் உதவி செய்யபட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்து உள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூர் கிராமிய போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தியதில் 20 வருடங்களாக குழந்தை இல்லாமல் தவம் இருந்து பெற்ற மகன் கனவில் 2 பேய் அழைத்துள்ளது. அதனால் மருந்து குடித்து உள்ளான் என்று அவரது பெற்றோர்கள் கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவன் தற்கொலை செய்ததற்கு என்ன கரணம் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.