kirthika and menaga  
மாவட்டம்

"கஷ்டப்பட்டு படிக்கவெச்ச தம்பிக்காக; உயிரையே விட்ட அக்கா" - என் தம்பி தப்பு பண்ணல.. காவல் நிலையத்தில் நடந்த கொடூரம்!

காவல் நிலையத்தில், பணியில் இருந்த காவல் அதிகாரி ஷர்மிளா இருவரையும்

Anbarasan

தஞ்சாவூர் அடுத்த நடுக்காவேரி பகுதியை சேர்ந்தவர், தினேஷ் இவருக்கு கீர்த்திகா, மேனகா என இரு சாகோதிரிகள் இருக்கின்றனர், இவர்களுக்கு அப்பா, அம்மா, இல்லாத நிலையில் தினேஷே குடும்பத்தை பார்த்து வந்துள்ளார். கீர்த்திகாவை, தினேஷும் மேனகாவும் சேர்ந்து பொறியியல் படிக்க வைத்துள்ளனர்.

இந்தநிலையில் நேற்று(ஏப்ரல் 8) காலை நடுக்காவேரி,காவல்நிலையத்தி இருந்து வந்த காவல் துறையினர், தினேஷை குற்ற வழக்குக்காக விசாரிக்க காவல் நிலையம் அல்லது சென்றுள்ளனர்.இதனை அறிந்த தினேஷின் சகோதரிகள் காவல் நிலையம், சென்று இதுகுறித்து தகவல் கேட்டுள்ளனர்.

காவல் நிலையத்தில், பணியில் இருந்த காவல் அதிகாரி ஷர்மிளா இருவரையும் தரை குறைவாக பேசியதாக சொல்லப்படுகிறது, இதனால் மனமுடைந்த சகோதிரிகள், காவல் நிலையம் வாயில் முன்பாக விஷம் அருந்தியுள்ளனர். தகவல் அறிந்து வந்த இவர்களின் உறவினர்கள், இருவரையும் மீட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

இருவருக்கும் தீவிர சிகிச்சை அளித்த நிலையில், கீர்த்திகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.மேலும் மேனகா தீவிர சிகிச்சையில் உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துமனையில் குவிந்துள்ளனர்.எனவே போலீசாரும் மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மேனகா பேசிய காணொளியில், தனது தம்பி எந்த தப்பும் செய்யவில்லை, தப்பு செய்தவர்களை குறித்து கேள்வி கேட்டதனால், அவரின் மீது போலீசார் பொய் வழக்குகளை போடுவதாக தெரிவிக்கிறார். இதே போல் முன்னர் ஒருமுறை விசாரணைக்கு அழைத்து சென்ற போது, அவரது நிச்சயம் தடைப்பட்டதாகவும், தெரிவிக்கிறார்.

மருத்துமனையில் செய்தியாளர்களிடம் பேசிய அவரது உறவினர்கள், இதுகுறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அப்படி இல்லை என்றால் தினேஷும் இறந்து விடுவார், அவர் வாழ்வதே தனது சகோதரிகளுக்காகத்தான் என கூறுகின்றனர்.

தினேஷ் மீது கொலை முயற்சி, மணல் கடத்தல், உள்பட 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் தஞ்சை திருவாருர் மாவட்டங்களில் உள்ளதாக காவல் துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்